வருகின்ற மகத்தான எழுப்புதலும், பரிசுத்த ஆவி ஊற்றப்படுதலும் THE GREAT COMING REVIVAL AND THE OUTPOURING ON THE HOLY SPIRIT சிகாகோ இல்லினாய்ஸ்- அமெரிக்கா 54 -07-18A 1. உங்களுக்கு நன்றி. நண்பர்களே உங்களுக்கு நன்றி. அது ஒரு... அந்த நற்பெயரை காப்பாற்ற நான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் இல்லையா? அருமையான சகோதரர் ஜோசப் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார், ஆனால் அவர் - அவர் அந்த விதமாகத்தான் என்னை அவர் நேசிக்கிறார். நான் அதற்கு தகுதியானவன் இல்லை, ஆனால் அவர் உண்மையாகவே நல்ல விதமாக என்மேல் அன்பு கூறுகிறார். ஆகவே நாங்கள் இருவரும் மிகவும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். ஆனால், இந்த மிகவும் அழகான சிகாகோ நகரத்தில் இந்த மாலைப் பொழுதில், கடல் கடந்து செல்வதற்கு சற்று முன்பாக தொடர் ஆராதனைகளை துவங்க இங்கே இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த அழகான அரங்கத்தை (Auditorium) தேவனுடைய ஊழியத்தை செய்வதற்காக இங்கே பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்று சில நாட்களுக்கு முன் அறிந்து கொண்ட போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதமான குளிர்சாதன வசதியுடன் சற்று நாம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் மேலும் தேவனுக்கு ஊழியம் செய்யலாம். மேலும், இங்கே இந்த பிற்பகல் வேளையில் எங்களுடன் இருக்கவும், எங்களுடன் சேர்ந்து தேவனை ஆராதிக்கும்படியாகவும் பகலின் வெப்பத்தைப் பாராமல் வந்துள்ள ஜனங்களாகிய உங்களை குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த அரங்கத்தின் பாதுகாவலர்கள், மற்றும் இதை நாம் கொண்டிருக்கும்படியாக தேவையான அனைத்தையும் வழங்கிய ஜனங்கள் எல்லாருக்கும் நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். ஒவ்வொருவரின் மேலும் தேவனுடைய ஆசீர்வாதங்கள் இருப்பதாக. 2. சற்று முன்பு நான் உள்ளே வரும் வேளையில் பாடகர் அருமையான பாடல் பாடுவதை கேட்டேன். அது உண்மையில் மிகவும் அற்புதமாக இருந்தது. நிச்சயமாகவே நல்ல பாடல்களை பாடுவதை நான் பாராட்டுகிறேன். "நான் பரலோகம் வந்ததும், நான் உள்ளே செல்வதற்கு கதவை தட்டும் போது அல்லது ஏதாவது ஒரு வழியில் தேவன் என்னை அனுமதிக்கும் பொழுது எங்கே பாடல்கள் பாடுகின்றனரோ அந்த இடத்தில் இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனென்றால் அது எனக்கு உண்மையாகவே மிகவும் பிடிக்கும். கடந்த காலங்களில் நாம் கேட்டிருந்த இந்த அற்புதமான பாடகர்களில் பலர், இப்போதும் அந்த புகழ் பெற்ற பழைய மீட்பின் பாடல்களை நித்தியம் முழுவதுமாக பாடிக் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்... மேலும் இப்போது, இங்கே கூட்டம் நிரம்பியுள்ளது மற்றொரு அம்சமாகும்... ஒருவேளை நான் அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பி வரும் பொழுது ஊழியங்களை சிறிது காலத்திற்கு வித்தியாசமான ஊழியமாக மாற்றி அமைக்க போகிறேன். அதிகமாக சுவிஷேசத்தை பிரசங்கிப்பது இப்படிப்பட்டவைகள். நோயுற்றவர்களுக்காக ஏறெடுக்கும் ஜெபத்தில் வரைமுறை செய்து, பதிலாக (நிச்சயமாக நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்வேன்) ஆனால் என்னுடைய சொந்த பீட அழைப்புகள் மற்றும் இதைப் போன்றவைகள் அதிகமாக செய்யப்படும். பகுத்தறிதலை விட்டுவிட்டு, அது தேவைப்படும் போது மட்டுமே இருக்கும்படி யாராவது ஒருவர் வாழ்க்கையில் திருத்தப்பட வேண்டி சில காரியங்கள் சரி செய்யப்பட வேண்டும், ஏன், தேவன் வழி நடத்தினால் நான் அதை செய்வேன் என்று எதிர்பார்க்கிறேன். 3. ஆனால் எனக்கு இன்னும் அமெரிக்காவில் மூன்று கூட்டங்கள் இருக்கிறது அது கலிபோர்னியா மற்றும் அதன் பின்னர் நியூயார்க் -ல் இருக்கிறது. இந்த கூட்டத்தில் இருந்து கலிபோர்னியாவுக்கு சென்று பின்பு உடனடியாக கலிபோர்னியாவில் இருந்து நியூயார்க் சென்று பிறகு நாங்கள் கடல் கடந்து வெளிநாடுகளுக்கு செல்கிறோம். கர்த்தர் இவற்றையெல்லாம் வாக்குறுதி அளித்திருக்கிறார் ஏனென்றால் ஒரு தரிசனத்தின் கீழ் கடல்கடந்து நான் வெளிநாடு சென்று கொண்டிருக்கிறேன். என் இதயத்தில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பிற்பகல் வேளையில் நான் பேசிக் கொண்டிருக்கும் ஜனங்களாகிய உங்களுக்கும் தேசம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மற்றவர்களுக்கும், அவர் என்ன கூறுகிறாரோ, அதை நேர்த்தியாக செய்து அவர் அதை காத்துக் கொள்கிறார் என்பதை அவர் அறிவார். அவருடைய ஊழியத்தில் இதுவரையில் இருந்து வரும் எனக்கு கர்த்தர் அளித்ததிலேயே மிகவும் அற்புதமான கூட்டமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது நிச்சயமாக இந்தியாவில் நடக்கும், பின்னர் அங்கிருந்து ஜெருசலேம், பிறகு ஜெர்மனி, இங்கிலாந்து அங்கிருந்து வீடு திரும்புதலாக இருக்கும். 4. இப்பொழுது இந்த பிற்பகல் வேளையில் வியாதிஸ்தர்களுக்கான ஜெபத்திற்கு முன்பு கொஞ்சம் பேச வேண்டியது என்னுடைய கடமை. நான் அதிகமாக பேசுபவன் அல்ல. நான்... ஒருவேளை...எனக்கு அவ்வளவாக குரல்வளம் இல்லை. நான் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். அது நன்றாக இருக்கும் அல்லவா? எல்லா இடத்தில் இருந்தும் நீங்கள் கேட்க முடிகிறதா? அது நல்லது நானும் கொஞ்சம் சத்தமாக பேச முயற்சிக்கிறேன். அது நல்லது. இந்த பிற்பகல் வேளையில், செய்திதாளில் அறிவிக்கப்பட்டுள்ளபடி வழக்கமான சுவிசேஷ பாடப்பொருளாக வருகின்ற மகத்தான எழுப்புதலும் மற்றும் பரிசுத்த ஆவி ஊற்றப்படுதலும் என்பதின் பேரில் பேசுவேன். 5. பின்னர் இன்றிரவு நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்யப் போகிறோம், மேலும் நாங்கள் எட்டு நாட்கள் சிகாகோவில் இருக்கும் போது, சுமார் (நான்கு லட்சம், மூன்று லட்சம்) நான்கு லட்சம் வசிக்கும் இந்த அழகான பெரிய நகரத்தில் பல நோயாளிகளும், துயரப்படுபவர்களும் இருக்கின்றனர். நமக்கு அருமையான மருத்துவமனைகளும், அற்புதமான மருத்துவர்களும் இருக்கிறார்கள், அதற்காக நாம் நம்முடைய தொப்பிகளை எடுத்துவிட்டு மேலான மரியாதை செலுத்துகிறோம். ஆனால் இவைகள் அனைத்திற்கும் மத்தியில் நமது விஞ்ஞான ஆராய்ச்சியில் இன்று மருத்துவர்களால் கட்டுப்படுத்த முடியாத பல நோய்களும் மற்றும் பல காரியங்களும் நம்மிடம் உள்ளன. மேலும் மரணத்திற்குரிய மனிதர்களாகிய நாம் இந்த நிலையில் இங்கு இருந்து கொண்டிருக்கிறோம், முடிந்தவரை நாம் பூமியில் இருக்கவுமே விரும்புகிறோம். எனவே நமது பரலோகப் பிதாவை நமக்கு உதவும்படியாக கேட்கும் பாக்கியம் இருப்பதாகவே நான் உணர்கிறேன். நம்முடைய மருத்துவர்கள் இதற்கு மேல் நமக்காக எதுவும் செய்ய முடியவில்லையென்றால் நாம் நோயுற்ற நிலையில் இருக்கும் போது நாம் நமது பரலோக பிதாவிடம் தேவனுடைய வார்த்தை எனும் வாக்குத்தத்தின்படி அவரிடம் வர நமக்கு உரிமை உண்டு. ஏதோ இதிகாச (mythical) எண்ணங்களின்படியோ அல்லது சில வேத சாஸ்திரத்தில் உள்ள ஆர்வத்தின் அடிப்படையில் அல்ல. ஆனால் தேவனுடைய வார்த்தையின் பெயரில் உள்ள வாக்குத்தத்தத்தின்படி நாம் நோய்வாய்ப் பட்டிருக்கும் போது அவர் நம்மை சுகமாக்குவார். அதனால் இந்த கூட்டத்தின்போது, ஒவ்வொரு நோயாளிக்காகவும் என் முழுமனதுடன் ஜெபிப்பேன். மேலும் உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்யவும், நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும் நீங்கள் மீண்டும் சந்தோஷமாக அவருக்கு ஊழியம் செய்யவும், உங்கள் ஜெபத்துடன் என்னுடைய ஜெபத்தையும் இணைத்துக் கொள்ளும்படி நம் பரலோக பிதாவிடம் கேட்டுக் கொள்வேன். பிறகு அதை செய்வது இந்த பூமியில் நாம் செய்யும் சிறிய பங்கு என்பதைப் போல நம்மை உணரும்படி செய்கிறது. தேவன் நம்மை இங்கே வைத்திருப்பது வாழ்க்கையை கொஞ்சம் இன்னும் கொஞ்சம் இனிமையாக்கிக் கொள்வதற்கு ஓரே முறை மட்டுமே நாம் இந்த வழியில் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் அதுவும் விரைவில் முடிந்து விடும். நாம் ஒரு பெரிய அவசரகாலத்தை நெருங்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று நான் தயக்கமின்றி நம்புகிறேன். தேசங்கள்; உலகம் அந்த நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறது. நாம் சாலையின் முடிவை நெருங்கி விட்டோம். இப்பொழுது எல்லா கிறிஸ்துவ அமைப்புகளும் (Christiandom). நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை போதித்துக் கொண்டிருக்கின்றன. அந்த காலத்திற்கு அருகில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். 6. சில காலத்திற்கு முன்பு, ஒரு சில வாரங்களுக்கு முன்பு, வாஷிங்டன் D.C-யில் காலை உணவுவேளையின் போது அல்லது அந்த அறையில் அமெரிக்க துணை அதிபர் திரு நிக்சன் என்பவர் அந்த வேளையில் பேசிக் கொண்டிருந்தார். மேலும் அவர், எவ்வாறு கம்யூனிசக் கொள்கையானது பூமியையும் நாம் பயணிக்க வேண்டிய விண்வெளியையும் துடைத்து வீசி எறிந்து கொண்டிருக்கிறது என்பதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார். உதாரணமாக இந்த உலகம் அப்படி எதிர்க்கொள்ளும் இலக்கை கம்யூனிசமானது ஏற்கனவே அதை பெரிய அளவில் கொண்டிருக்கிறது. பார்த்தீர்களா? அதன் பின்னர், அந்த பாகமானது விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் இடையே கலந்து விடுகிறது. மேலும் கிறிஸ்துவானவர், இந்த சுவிசேஷம் உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் முன்பாக ஒரு மிகப்பெரிய வேலை அவனுக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆகவே நாம் உடனே எழும்பி நம்முடைய பிதாவின் வேலையை சரியாக செய்து கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு ஸ்தாபனமும் - ஒவ்வொருவரும் அவரவர் சொந்த சபையை உடையவர்களாக ஒரு போதகரை ஏற்றுக் கொண்டு அவருக்கு பின்னால் இருந்து கொண்டு அவருடைய திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஆதரிக்க வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும் ஏன் அதனால்தான் தேவனுடைய சித்தத்தின்படி என் தோள்களை அந்த சக்கரத்தின் மீது வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அறிவுக்கு தெரிந்தபடி நம்முடைய கர்த்தராகிய இயேசு விரைவில் வந்து கொண்டிருக்கிறார். அந்த வருகையை குறித்து ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கொண்டு வர முயற்சிப்பதால் தான் இந்த மதிய வேளையில் அதைக் குறித்துப் பேச இதை தேர்ந்தெடுத்தேன். அவிசுவாசிகளுக்கு இது மிகவும் சோர்வடையச் செய்யும் வேளையாகவும், ஆனால் விசுவாசிக்கு இது ஒரு மிகவும் மகிழ்ச்சியான வேளையாகவும் இருக்கிறது. ஏனெனில் மீட்கப்படும் நேரம் மிகவும் அருகாமையில் இருப்பதாக நாம் விசுவாசிக்கிறோம். 7. இப்பொழுது இந்த பிற்பகல் வேளையில் வேதாகமத்தில் இருந்து இரண்டு பகுதிகளை நான் வாசிக்க விரும்புகிறேன். அவைகளில் ஒன்று பரிசுத்த லூக்காவின் புத்தகத்திலும், மற்றொன்று சகரியாவின் புத்தகத்திலும் இருக்கிறது. (சரி....நன்றி) சகோதரர் ஜோசப் என்னிடம் கேட்டார். இப்போது ஜனங்களுக்கு நன்றாக கேட்கிறதா? பின்னால் உள்ள அனைவருக்கும் நன்றாக கேட்கிறதா? சரி. உங்களால் கேட்க முடிந்தால் உங்கள் கரங்களை உயர்த்தி காண்பியுங்கள். இன்னுமாக சரியாக கேட்கவில்லை. ஒரு நிமிடம் [சகோதரர் போஸ் அவர்கள் "உங்களுக்கு நன்றாக கேட்கிறதா? உங்களால் கேட்க முடிந்தால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள்" என்று பார்வையாளர்களை பார்த்து கேட்கிறார்"] ஆம்...ஆம்...சரி. 8. இப்பொழுது பரிசுத்த லூக்காவின் புத்தகத்தில் இருந்து 21ம் அதிகாரம் 25-ம் வசனம் தொடங்கி நாம் வசனத்தை வாசிக்கும் போது கவனமாக கவனியுங்கள், அவருடைய வார்த்தை ஒரு போதும் தவறாது. என்னுடைய வார்த்தையோ அல்லது உங்களுடைய வார்த்தையோ தவறிப் போகலாம், காரணம் நாம் நிலையற்றவர்கள், ஆனால் இந்த வார்த்தையோ ஒரு போதும் தவறாததாக இருக்கிறது இது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. "சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும், அடையாளங்கள் தோன்றும். பூமியின் மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும், சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும், ஆதலால் பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோகும். அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள் இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால் நீங்கள் நிமிர்ந்துபார்த்து உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்." இப்பொழுது சகரியாவின் புத்தகம் 14-ஆம் அதிகாரம் 21-வது வசனம் "ஒருநாள் உண்டு. அது கர்த்தருக்குத் தெரிந்தது. அது பகலுமல்ல இரவுமல்ல. ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்." 9. இப்பொழுது நாம் ஜெபத்திற்காக நமது தலைகளை ஒரு நிமிடம் தாழ்த்துவோமாக. எங்கள் அன்பான பரலோக பிதாவே, இந்த பிற்பகல் வேளையில் நாங்கள் உமது நேசகுமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மை அணுகுகிறோம். மேலும் முதலாவதாக அவர் கல்வாரியில் மரித்து தகுதியில்லாத பாவிகளாகிய நம்மை மீட்டுக்கொண்டு மீண்டுமாக பிதாவினிடத்தில் கொண்டு வந்து சேர்த்ததற்காக நன்றி செலுத்துகிறோம். அங்கே தானே மகத்தான அந்த போதுமான பலியானது செலுத்தப்பட்டு மீண்டுமாக மனிதன் தேவனோடு ஒப்புரவாக்கபட்டிருக்கிறான். அதற்காக நாங்கள உமக்கு நன்றி செலுத்துகிறோம். "என் நாமத்தினால் நீங்கள் பிதாவிடம் எதைக் கேட்டாலும், பிதா குமாரனில் மகிமைப்படும்படியாக நான் அதைச் செய்வேன்" என்ற வார்த்தையை அவர் நமக்கு விட்டு சென்றிருக்கிறார். பிதாவே, இந்த பிற்பகல் வேளையில், எங்களுடைய ஜெபத்தை ஏற்றுக் கொண்டு ஒரு மகத்தான பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலை இந்த கூட்டம் முழுவதிலுமாக எங்களுக்கு தாரும். சிகாகோ ஜனங்களிடத்தில் இது ஒரு நீண்ட கால நினைவு கூறுதலாக இருக்கட்டும், ஏனென்றால் இந்த கூட்டத்தில் அவருடைய பிரசன்னம் இருந்து கொண்டிருக்கிறது. 10. நாங்கள் கூடி வந்திருக்கும் இந்த கட்டிடத்தை நீர் ஆசீர்வதியும். இந்த கட்டிடத்தின் உரிமையாளர், மற்றும் இந்த இடத்தை பெற்றுத்தந்தவர்களுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். மேலும் அவர்களை மிகுதியாக நீர் ஆசீர்வதிக்க வேண்டுமாய் நாங்கள் பிரார்த்திக்கிறோம். மேலும் இப்பொழுது இந்த கூட்டங்களில் இணைந்து ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிற எல்லா ஊழியக்காரர்கள், மற்றும் எல்லா இடங்களிலும் உள்ள பாமர ஜனங்கள் அனைவரையும் வியாதிஸ்தர்கள் துன்பப்படுகிறவர்களை நீர் ஆசீர்வதித்து, தேவனில் விசுவாசம் கொள்ளும்படியாக நம்பிக்கையையும், தைரியத்தையும், பெலத்தையும் அவர்களுக்கு தருவீராக. மேலும் ஒவ்வொரு ஊழியக்காரரும் பேசுகையில் சுவிசேஷமானது வல்லமையுடனும், அதிகாரத்துடனும் அவிசுவாசியின் அருகில் சென்று அவனை ஒரு விசுவாசியாக மாற்றும்படியாகவும், கர்த்தரை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்படியாகவும் செய்வீராக. இந்த பிற்பகல் வேளையில் உம்முடைய ஊழியக்காரர்களை அந்த சிலுவைக்கு பின்னாக மறைத்துக் கொண்டு; பேசுகின்ற உதடுகளையும் கேட்கின்ற இருதயங்களையும் விருத்தசேதனம் செய்வீராக. இன்று நாங்கள் திரும்பி செல்லும் போது அவருடைய பிரசன்னத்தில் நம்முடைய இருதயங்கள் நமக்குள் கொழுந்து விட்டு எரியவில்லையா?" என்று எம்மாவூர் சீடர்கள் கூறியதைப் போல நாங்களும் கூறட்டும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 11. இப்பொழுது, ஒரு சில நிமிடங்கள் அந்த மகத்தான எழுப்புதல் மீது உங்கள் கவனம் இருக்க வேண்டும், மேலும் அதை நாம் இப்பொழுது நேருக்குநேர் எதிர்கொண்டுவருகிறோம் என்று நான் நம்புகிறேன். முதலாவதான காரியம், தேவன் எப்பொழுதுமே ஜனங்களுக்கு ஒரு ஆசீர்வாதத்தை அல்லது நியாயத் தீர்ப்பை அனுப்புவதற்கு முன்பாக எச்சரிக்கையை அனுப்புகிறார். எப்பொழுதுமே அது வேத வசனங்களில் இருந்து கொண்டிருக்கிறது. தேவன் அந்த எச்சரிக்கை களையும் அல்லது அடையாளங்களையும் கொடுக்கிறார். அடையாளங்களை நாம் தேடக்கூடாது என்று வேதாமத்திலிருந்து கற்பிக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால் அது ஒரு பலவீனமானதும் மற்றும் இந்த விபச்சார சந்ததியானது அடையாளங்களை தேடுவதைப் போல அது ஒரு மோசமான அடையாளமாக இருந்து விடும். ஆனால் அடையாளங்களை தேடிக் கொண்டிருப்பதற்கும் பின்பு அடையாளங்களை அங்கீகரிப்பதற்கும் அங்கே ஒரு வித்தியாசம் இருக்கிறது. பாருங்கள்? அடையாளங்களை மட்டுமே தேடும் ஒரு நபர்... வேறு வார்த்தைகளில் கூறுவதானால் "தேவனே இப்பொழுதே நீர் மழை பொழியச் செய்வீரானால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று நம்புவேன்" நான் அப்படி கேட்க வேண்டியதில்லை நிபந்தனைகளை நான் சந்திக்கும் போது தேவனுடைய வார்த்தையின் படி நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். பாருங்கள்? நாம் அப்படிப்பட்ட ஒரு முறையில் அடையாளங்களுக்கு பின்னால் தேவனை தேடவே கூடாது. 12. ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையில் உரைத்திருக்கும் போது சாலையில் உள்ள வெவ்வேறு மைல் கற்களை நாம் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறார் நாம் அதை செய்ய வேண்டும் என்று விசுவாசிக்கிறேன். நீங்களும் கூட அப்படி நினைக்கவில்லையா? நாம் அனைவருமே இந்த மைல் கற்களை கவனிக்க வேண்டும். மேலும் தேவன் ஒவ்வொரு சந்ததிக்கும் நாம் அறிந்து கொள்ளும்படியாக அதை அமைத்து வைத்திருக்கிறார் அந்த மைல் கற்கள் எப்பொழுதுமே அங்கே இருந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் வந்து கொண்டிருந்த போது... நீங்கள் இப்பொழுது உங்கள் காரில் சிகாகோ நகரத்தில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு சென்று கொண்டிருப்பீர்களானால் நியூயார்க் நகரமானது அருகில் இருப்பதை குறிக்கும் அடையாள பலகைகள் சாலையில் இருக்கும். இப்பொழுது நாமும் கூட இந்த கிறிஸ்தவ யாத்திரையில் இந்த வளைவு அல்லது அந்த வளைவு அல்லது வித்தியாசமான காரியங்களுக்கு அருகில் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறோம். நாம் நமது தேசத்தை நன்கு அறிந்திருப்போமானால் "சரி நாம், நியூயார்க் நகரத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்று கூற முடியும். இப்பொழுது நாம் பிளாட்ஸ்பர்க் (Platsburg] நகரத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம், அப்படியே கீழே கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறோம்" என்று இப்படி கூறமுடியும், சரி, நாம் நியூயார்க் நகரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு தெரியும். 13. ஆகவே இப்பொழுதும் அதேகாரியம் தான் இருந்து கொண்டிருக்கிறது, வேதாகமத்தில் இயேசு என்ன கூறியுள்ளார் என்பதையும், என்ன நடக்கும் என்றும் நாம் அறிந்திருந்தோமானால் (அதை நாம் இப்பொழுது தேட வேண்டியதில்லை. அதன் பிறகு அந்த காரியங்கள் தோன்றுவதற்காக நாம் கவனித்து பார்த்து கொண்டிருக்கிறோம்] அப்பொழுது நாம் சேர வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்கிறோம். இப்பொழுது அவர் அதை எல்லா நேரங்களிலும் அப்படித்தான் செய்து வருகிறார். ஆகவே அதை செய்வதற்கு முன்பாக அவர் நியாயதீர்ப்பிற்கு முன்பு எச்சரிக்கைகளை அனுப்புகிறார். உதாரணமாக, நோவாவின் நாட்களில் ஜலப்பிரளயத்திற்கு முந்தைய உலகம் அழிக்கப்படுவதற்கு முன்பு, நோவா நூற்று இருபது ஆண்டுகளாக பிரசங்கித்து கொண்டிருந்தான். அந்த நாளின் சமீப காலத்தில் இருந்த ஜனங்களுக்கு, அவன் பேசிக் கொண்டிருந்த அந்த செய்தியானது உலகத்தின் அழிவு நெருங்கி விட்டது என்பதற்கான ஒரு அடையாளமாக இருந்தது. நோவாவின் பிரசங்கமும் அதை செய்யும் அவனுடைய வினோதமான முறையும் ஜனங்கள் அவர்கள் வழக்கமாக கேட்டுப் பழகியதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு செய்தியை அவன் கொண்டிருந்தான். 14. ஏனோக்கும் மற்றும் பலரும் பிரசிங்கித்தனர். ஆனால் நோவா வழக்கத்திற்கு மாறாக ஒரு வித்தியாசமான செய்தியை உடையவனாக இருந்தான். அவன் மலையின் மேல் சென்று ஒரு பேழையை (Ark) கட்டினான், ஏனென்றால் வானத்திலிருந்து மழை பெய்யப் போகிறது என்று அவனுக்கு சொல்லப்பட்டிருந்தது. தேவன் அப்படி கூறியிருந்தார். மேலும் வானத்திலிருந்து மழையே பெய்யாமல் இருந்த போது வானத்திலிருந்து மழை பெய்யப் போகிறது என்கிற அத்தகைய காரியத்தை யார் தான் நம்ப முடியும். ஆனால் வானத்திலிருந்து மழை பெய்யும் என்று தேவன் கூறியிருப்பார் என்றால் தேவனால் வானத்திலிருந்து மழை பெய்யச் செய்ய முடியும் பாருங்கள். அவர் தனது வார்த்தையை நிறைவேற்ற முடியும். ஆகவே நோவா சுத்தியலைக் கொண்டு அந்த பேழையை செய்த போது ஜனங்களால் பரியாசம் செய்யப்பட்டான். அந்த நாளில் அவர்கள் சிறப்பான, ஜனங்களாகவும், நல்ல கல்வி அறிவு பெற்ற மேதைகளாகவும். நாகரீகமானவர்களாகவும் இன்று நம் மத்தியில் இருப்பவர்களை விட உயர்ந்த நிலையில் இருந்தனர் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவர்கள் அப்படித்தான் இருந்தனர். அந்த நாளில் அவர்கள் செய்த காரியங்களை இன்று நம்மால் செய்ய முடியாது என்பதை அது நிருபிக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறினால், உயிரற்ற உடல்களை அல்லது மரித்துப் போன சரீரங்களை கெட்டுப் போகாமல் வைத்து இருப்பதற்கு ஒரு வித திரவத்தை அவர்களால் செய்ய முடிந்தது. இன்று நாம் அதை உருவாக்க முடியாது. அவர்கள் கூர்நுனிக் கோபுரங்களையும் (Pyramid) சிங்கமுகமும் மனிதஉடலும் கொண்ட உருவங்களையும் (Sphinx) இதுபோன்ற மற்ற காரியங்களையும் கட்டியிருந்தனர். அவர்களுடைய அடையாளங்களை இன்றும் கூட நாம் பார்க்கிறோம். 15. இங்கே சமீபத்தில் மெக்சிகோ நகரில் ஒரு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நவீன நீர்ப்பாசன அமைப்பு ஒன்றை நாங்கள் தோண்டி எடுத்தோம். அங்கே ஒரு நவீன நாகரீகம் இருந்தது. அநேகமாக ஜலப்பிரளயத்திற்கு முந்தைய காலத்தில் அவர்கள் நம்மை விட கலாச்சாரத்திலும், விஞ்ஞானத்திலும் மிக அதிக தூரத்தில் இருந்தனர், அநேகமாக மதரீதியாக கூறுவோமானால் மிகவும் முன்னேறிய நிலையில் இருந்தனர். மேலும் (ஒருவேளை அவர்கள் இப்படி கூறியிருக்கலாம்) ஒரு பைத்தியக்காரன் வானத்தில் இருந்து மழை பெய்யப் போகிறது என்று கூறிக்கொண்டு ஒரு பேழையை கட்ட துவங்கியிருக்கிறான் என்று ஜனங்கள் கேலி செய்தனர். இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் ஒரே ஒரு காரியத்தை அவன் உடையவனாக இருந்தான். அவன் தன்னுடைய கொள்கையை கர்த்தர் உரைக்கிறதாவது என்பதின் மேல் வைத்திருந்தான். தேவன் அவனிடம் கூறியிருந்ததை அவன் அறிந்திருந்தான், மேலும் உலகம் மிகவும் பொல்லாததாகிவிட்டது. அதனால் மீண்டும் துவங்குவதற்கு அவர் ஒரு மழையை அனுப்பி அந்த முழுஉலகத்தையும் மற்றும் நாகரீகம் முழுவதையும் அழித்துப் போட்டு முடிவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. நோவா உலகத்தின் அழிவு நெருங்கி வந்து கொண்டிருந்தற்கான ஒரு அடையாளமாக இருந்தான். ஏனென்றால் நாம் தேவனுடைய இரக்கத்தின் எல்லைக் கோட்டை கடந்த பின்பு நியாயத்தீர்ப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. 16. மேலும் நான் இதைச் சொல்ல விரும்பவில்லை, அதைக் கூறுவதற்கு எனக்குப் பயமாக இருக்கிறது. பல பல தேசங்களுக்குப் பயணம் செய்து மற்ற தேசங்களின் நிலைமைகளை அறிந்து கொண்ட பின்பு இங்குள்ள நம்முடைய அழகான தேசத்தைப்பற்றி நினைத்துப் பாருங்கள். "ஒரு அமெரிக்கனாக இருப்பது மகத்தானது" என்று அவர்கள் கூறுகின்றனர். 'அது மகத்தானது" என்று மிக அதிகமாக கூறிக் கொண்டிருக்கின்றனர் அது உண்மைதான். ஆனால் இவற்றின் மத்தியில், எல்லா இடங்களிலும் இந்த பெரிய நாகரீகத்தின் அழிவின் அடையாளங்கள் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். ஏனென்றால் மனிதர்கள் நோவாவின் நாட்களில் நடந்து கொண்டதைப் போல தேவனுடைய சித்தத்தை தேடுவதற்குப் பதிலாக தங்கள் சொந்த விருப்பத்தின்படி நடந்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய உலகமானது நவீனமாகி விட்டது. ஒவ்வொரு நாகரீகமும் ஒழுக்கம் கடந்த நிலையில் மெல்லிய கூரான கோபுரத்தைப் கட்டமைக்கப்பட்டு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. மேலும் அவள் கீழான நிலைக்கு மீண்டும் சென்று கொண்டிருக்கிறாள். அந்த அடையாளக் கம்பங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறோம். வேத வாக்கியங்களை நாம் வாசிக்கும் போது நாம் கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு மிகவும் அருகில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். பின்பு இன்னும் ஒரு முறை அவருடைய வருகை வர இருக்கிறது. 17. அங்கே கர்த்தராகிய இயேசுவின் மூன்று வருகைகள் இருக்கிறது. முதலாவதாக அவர் தன்னுடைய மணவாட்டியை மீட்டுக் கொள்ளுவதற்காக அவளுக்காக அவர் மரித்தார்; இரண்டாவதாக அவருடைய மணவாட்டியை பெற்றுக் கொள்ளும்படியாக அவர் அவளுக்காக வருகிறார். மூன்றாவதாக அவருடைய மணவாட்டியுடன் ஆயிரவருட அரசாட்சிக்காக வருகிறார். ஆகவே அங்கே மூன்று வருகைகள் இருக்கும். அவைகளில் ஒன்று கடந்து சென்று விட்டது, மேலும் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு அருகில் இருக்கிறோம் என்பதை அடையாளக் கம்பங்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன. நாம் எல்லாக் காரியங்களையும் முயற்சித்தோம். நாம் பலவிதமான இப்படிப்பட்ட அனைத்துக் காரியங்களையும், பெரிய கூட்டங்களையும் நடத்தியுள்ளோம். இந்த உலகமானது...சரி கம்யூனிச கொள்கையானது இந்த உலகத்தை இன்னுமாக துடைத்து வீசி எறிந்துகொண்டிருக்கிறது. மேலும் ஜனங்களுடைய சிந்தைகள் அமைதியடையாமல் நாம் வெறுமனே உச்சக்கட்டத்தில் முடிவை நோக்கி கடைசி கட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது நீங்கள் காண்கிறபடி விஞ்ஞானம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து, அணு ஆயுதங்கள் மற்றும் அணுகுண்டுகள் போன்றவற்றையும், இப்பொழுது வாயு குண்டுகளையும் கூட (Hydrogen Bombs காற்றில் கலக்கும் விஷவாயு குண்டுகள்) இது போன்றவைகளை கண்டுபிடித்துள்ளது., அவர்கள் இப்பொழுது ஒரு புதிய ஆயுதம் ஒன்றை வைத்துள்ளனர், அதை பூமியில் போடும் போது அது ஒரு பக்கம் ஆயிரத்து ஐந்நூறு மைல்களும் இன்னொரு பக்கம் மூவாயிரம் மைல்கள் தூரமும் சென்று பரவி அதனால் ஏற்படக்கூடிய அந்த மிகப் பெரிய நாசகார சக்திவாய்ந்த தாக்குதலால் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் அழித்துவிடும் அவற்றில் ஒன்றை பூகோள ரீதியாக லூயிவில்லில் (Louieville) உள்ள கென்டக்கி (Kentuky) மாகாணத்தின் மீது வீழச் செய்தால் அமெரிக்க ஐக்கிய நாடு முழுவதும் ஒரு நொடியில் இடிந்து விழுந்து அழிக்கப்பட்டுவிடும். மேலும் அத்தகைய குண்டுகள் வீசப்படும் போது அமெரிக்காவில் உயிருள்ள எந்த தாவரமும் மற்றும் எதுவுமே பூமியில் விடப்பட்டு இருக்காது. இந்த வழியில் ஆயிரத்து ஐநூறு மைல்கள், மற்றும் மூவாயிரம் மைல்களுக்கு அப்பால் தொலைவில்.... அது ஒரு கதிர்வீச்சாக இருக்கிறது... (சமீபத்தில் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு வானொலியில் ஒலிபரப்பானதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். 18. மகத்தான அடையாளக்கம்பங்கள் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன. நோவாவும் அதே காரியத்தை கொண்டிருந்தான். இப்பொழுது கவனியுங்கள் சிறந்த விஞ்ஞானிகள், அவர்களுடைய புள்ளி விவரங்களுடன் அழிவை சுட்டிக் காட்டி நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். மருத்துவ விஞ்ஞானத்தின் மூலம் இந்த அழிவின் வழியாக அவர்களால் என்ன செய்ய முடியும், மற்றும் தானியங்கி இயந்திரங்கள், விமான போக்குவரத்து, சக்திமிக்க ஜெட் விமானங்கள் இவைகள் மூலம் அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காண்பித்துக்கொண்டிருக்கின்றனர். நாம் முடிவு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் முடிவின் எல்லையில் இருந்து கொண்டிருக்கிறோம். அப்படியே தேவனும் கூட ஜனங்களை இரட்சிப்பதற்காக ஒரு பேழையை கட்டிக் கொண்டிருக்கிறார். இன்று அந்த கட்டுமானம் கர்த்தராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது. அது ஒருவொருக்கொருவர் ஒப்புரவாகி, ஒவ்வொரு குழப்பங்களிலும் இருந்து வெளியே வந்து கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்மை சகோதர சகோதரிகளாக பாவித்து அந்த பேழைக்கு முன்பாக கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றனர். இன்று போர்களங்களில், எல்லா இடங்களில் உள்ள போர்களங்களில் அதாவது அறுவடை வயல்களில் மனிதர்கள் மகத்தான விசுவாசத்துடன் அறுவடைக்காக ஒரு துடிப்புடன் இருந்து கொண்டிருக்கின்றனர். மேலும் மகத்தான நாகரீகத்திற்கு ஒரு முடிவு அருகில் இருந்து கொண்டிருக்கிற அடையாளத்தைப் போலவே, தேவன் அவர்களை ஆசீர்வதித்து அடையாளங்கள், அற்புதங்கள் போன்றவைகளோடு அவர்களுடன் கூடவே சென்று கொண்டிருக்கிறார், இந்த கடைசி நாட்களில் அவர் அதை வாக்களித்திருக்கிறார். அது ஒரு மைல்கம்பமாக வெளியே தொங்கிக் கொண்டிருக்கிறது, நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. 19. இந்த வாரம் நடக்கின்ற கூட்டத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், பெருமை பேசுவதற்காக அல்ல, (ஏனெனில் அப்படி செய்வதை நான் நம்புவதில்லை தேவன் அதை தடை செய்கிறார்) ஆனால் எங்கள் விசுவாசமும் எங்களின் செய்தியும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியில் சரியாக இளைப்பாறிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவர்களாக "கர்த்தர் என்ன செய்வார் என்பதை வந்து பாருங்கள்" என்று கூறுவதற்கு நாங்கள் பயப்படுவதில்லை. ஏனெனில் தேவன் முதலாவதாக அதை வாக்களித்திருக்கிறார். எனவே எல்லா நம்பிக்கையுடனும், முழுமையான உறுதியுடனும் தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்வார், மேலும் அதைச் செய்வார் என்று எனக்கு தெரியும். பாருங்கள், நாம் அப்படி இல்லையென்றால்... உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் குழுக்கள் ளஇந்த சிறிய எழுச்சியுடன் இப்போது சர்வதேச அளவில் எல்லா இடங்களில் இருந்தும், வெவ்வேறு மத ஸ்தாபனங்களில் இருந்தும் ஒன்றாக கூடி வந்து பரிசுத்த ஆவியின் வல்லமையால் தங்களாகவே ஒருவருக்கொருவர் இணைத்துக் கொண்டிருக்கின்றனர், உலகம் எப்பொழுதும் கேட்டிராத ஒரு மகத்தான எழுப்புதலில் இப்பொழுது இருந்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். சரியாக இப்பொழுது நாமும் கூட அதில் இருந்து கொண்டிருக்கிறோம். மேலும் அது அவிசுவாசிக்கு நாம் கடைசி காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என்ற அடையாளமாக இருக்கிறது. நாம் முடிவுக்கு அருகாமையில் இருந்து கொண்டிருக்கிறோம். 20. இப்பொழுது, சற்று முன்பு நான் கூறியதைப் போல அந்த ஜலப்பிரளய காலத்தின் அழிவிற்கு நோவா அடையாளமாக இருந்தான். மேலும் அது தொடங்குவதற்கு ஒரு அடையாளத்தை உடையவனாக இருந்தான். ஏனோக்கு மேலே எடுத்துக் கொள்ளப்பட்டதை அவன் பார்த்த பிறகு அந்த நேரமானது துவங்கப் போகிறது, அந்த முடிவின் அடையாளம் துவங்குவதற்கான அடையாளமாக அது இருக்கும் என்றும் அதன்பிறகு முடிவு சமீபமாக இருக்கும் என்றும் அவன் அறிந்து கொண்டான். ஆகவே ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லும் சபை குழுவினருக்கு நிச்சயமாகவே ஒரு பாவனையாக இருந்தான், நோவா உபத்திரவ காலத்தின் வழியாக செல்லும் தெரிந்துகொள்ளப்பட்ட யூதர்களுக்கு ஒரு பாவனையாக இருக்கிறான். ஆகவே இப்பொழுது நாம் அந்த நாளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 21. மேலும் சோதோம் மற்றும் கொமோராவில், சோதோம், கொமேரோவின் அழிவு வருவதற்கு சற்று முன்பு அங்கே நீதிமான்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை என்பதை கண்டுபிடிக்க இரண்டு தூதர்கள் கீழே அனுப்பப்பட்டனர். மேலும் ஒரே ஒரு நீதிமான் அங்கே இருந்தான் அவன் பெயர் லோத்து. அவனைக் குறித்து அதிகமாக பேசப்படாத போதிலும் அவன் ஒரு நீதிமானாக இருந்தான். மேலும் அவர்களுடைய பாவங்கள் அவனுடைய நீதியுள்ள ஆத்துமாவை தினமும் வாதித்துக் கொண்டிருந்ததாக வேதம் நமக்கு கூறுகின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவோமானால் ஜனங்கள் அந்த வழியில் சென்று மிகவும் மோசமாக பாவம் செய்து கொண்டிருந்ததை பார்த்தபோது அது அவனுக்கு ஒரு வித பதட்டத்தை கொடுத்தது. மேலும் இன்று சிகாகோ நகர தெருக்களில் நடந்து திரிந்துக்கொண்டிருக்கிற அத்தகைய ஜனங்களைப் போலவே, அமெரிக்க போன்ற ஒரு அருமையான தேசத்தில் மதுபான கடைகளில், பீர் குடித்துவிட்டு மற்றும் அரை நிர்வாணக் கோலத்தில் ஆடையணிந்த பெண்களும் ஆண்களும் சிகாகோ நகரத்தின் தெருக்களில் காம் இச்சையுடன் இச்சையான இப்படிப்பட்ட காரியங்களுடன் நடந்து திரிந்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு நீதியுள்ள ஆத்துமாவைக் கொண்ட மனிதன், தன்னுடைய இனத்தை சார்ந்த மனிதர்கள் தேவனுடைய விருப்பங்களுக்கு மாறாக மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் சென்று கொண்டிருப்பதை பார்க்கும் போது நீதியுள்ள ஆவியை உடைய அந்த மனிதனுடைய ஆத்துமாவிற்கு முற்றிலும் வேதனை அளிப்பதாக இருந்தது. ஆனால் இன்னுமாக அந்த ஜனங்கள் தாங்களும் மற்றவர்களைப் போலவே நல்லவர்களாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் மத்தியில் இவைகள் அனத்துமே ஒரு அடையாள கமபங்களாக இருப்பதை நாம் உணர வேண்டியவர்களாக இருக்கிறோம். 22. மேலும் நோவா...இல்லை-ஆனால் இது...நாம், அங்கே கீழே சோதோமில் லோத்து இருந்தான். அந்த இடம் அழியப் போவதற்கு சற்று முன்பாக இரண்டு பிரசங்கிகள் அல்லது இரண்டு தூதர்கள் மகிமையிலிருந்து இறங்கி வந்து அந்த பட்டிணத்தில் பண்டைய பாணியிலான ஒரு எழுப்புதலை ஏற்படுத்தி அந்த ஆண்களையும், பெண்களையும் மீண்டும் திரும்பவுமாக கொண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த ஜனங்கள் அவர்களிடம் மிகவும் வித்தியாசமான முறையில், காம இச்சையுடனும் வெறியுடனும் அவர்களை நோக்கி சென்றனர். ஒரு வழியில் இச்சையின் ஆவி அவர்களை இன்னுமாக பிடித்துக் கொண்டிருந்த வரையில் அவர்களால் ஒரு எழுப்புதலுக்குரிய எந்த வித முன்னேற்றத்தையும் செய்ய முடியவில்லை. அது என்னவாக இருந்தது? அது ஒரு அடையாளமாக இருந்தது. அந்த தூதர்கள் நகரத்திற்குள் நுழைந்தபோது ஒன்று மனந்திரும்புதல் அல்லது அதை தொடர்ந்து சீக்கிரம் அழிவு பின்தொடரும் என்பதற்கான ஒரு அடையாளமாக அது இருந்தது. இன்று சிகாகோ நகரத்தில் உள்ள ஜனங்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன், இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு மட்டும் நான் பேச முடிந்தால் கிறிஸ்தவ மார்க்கத்தின் அந்த அடையாளங்கள், அதிசயங்கள், மற்றும் அந்த அற்புதங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு அடையாளமாக இருந்து கொண்டிருக்கிறது. "தயாராகுங்கள் இல்லையெனில் இந்த எழுப்புதலைத் தொடர்ந்து அழிவுகள் வரும்." அங்கே ஒரு எழுப்புதல் இருக்கும் அதன் பிறகு அங்கே ஒரு அழிவு இருக்கும். 23. எனவே அமெரிக்கா இப்பொழுது அதனுடைய எழுப்புதலைக் கொண்டிருக்கிறது. அதை நீங்கள் புரிந்து கொள்ள உங்களுக்கு கடினமாக இருக்காது. அதை காண்பது ஒரு வேளை கடினமாக இருக்கலாம். இயேசு இங்கே இருந்தபோது இருந்ததைப்போலவே அது ஒரு வகையான மறைத்துக்கொள்ளும் கீழ்ப்பூச்சை (Undercoat) போன்று இருக்கிறது. இயேசு பூமிக்கு வந்து இங்கே இருந்த போது அவர் அழிவின் ஒரு அடையாளமாக இருந்தார். அந்த யூதர்கள் சிக்கலான யூத மதக் கொள்கையை, பாமர ஜனங்களால் அதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அதை சிக்கலானதாக மாற்றி வைத்திருந்தனர். ஏன், அவர்கள் ஒரு இளங்கலைப் பட்டத்தை பெற்றிருக்க வேண்டும். அவர்களுடைய அனைத்து ஊழியக்காரர்களும் டாக்டர் பட்டம் உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஏழை ஜனங்கள் தங்கள் சட்டை பை காலியாகும் வரையில் தங்கள் பணத்தை பொக்கிஷப்பெட்டிக்குள் சேர்க்கும்படியாக அவர்கள் அதை மிகவும் சிக்கலானதாக மாற்றி வைத்திருந்தனர். மேலும் அவர்களால் அந்த ஆராதனைகளையும் கூட புரிந்து கொள்ள முடியாதபடி இருந்தனர். காரணம் அவர்கள் அதை வெவ்வேறு உச்ச தொனியில் பேசியதால் அந்த வைதீக யூத மதக் கொள்கைகள் (Orthodex) மற்றவைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவில் இருந்தது. ஆகவே இயேசு ஏழை மக்களுக்கு ஒரு அடையாளமாக வந்தார். இப்பொழுது நான் என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்? "இயேசு அந்த அந்த ஏழை ஜனங்களுக்கு போதித்துக் கொண்டு ஒரு அடையாளமாக இருந்தார்" அதை அவரே கூறியதாக இருக்கிறது. "நீங்கள் போய் யோவானிடம் இந்த காரியங்களை அறிவியுங்கள், குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், செவிடர் கேட்கிறார்கள் மேலும் தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப் படுகிறது."அந்த யூதர்களின் தேசத்திற்கு அல்லது நாகரிகத்தின் முடிவு காலத்திற்கு அது ஒரு அடையாளமாக இருந்தது. அது ஒரு அடையாளம். அவர்களுக்குரிய அந்த அடையாளத்தை அவர்கள் அங்கீகரிக்க தவறிவிட்டனர். ஒரு நாள் இயேசு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, "வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை தர வேண்டும் என்று அவர்கள் கேட்டனர்" அப்பொழுது அவர் ஒரு வார்த்தையை மேற்கோள் காட்டி, "இந்த பொல்லாத விபச்சார சந்ததி அடையாளத்தை தேடுகிறார்கள்" மேலும் "அஸ்தமனமாகிறபோது செவ்வானமும் மந்தாரமுமா யிருக்கிறது நாளை வானம் மப்பும் மந்தாரமுமாகவும் இருக்கும்" என்று சொல்கிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க தெரியுமே காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? மேலும் "நீங்கள் என்னை அறிந்திருப்பீர்களானால் என்னுடைய நாளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்" என்றார். 24. நிச்சயமாகவே, ஏசாயா மற்றும் தீர்க்கதரிசிகளும் அவரைக் குறித்து கர்த்தராகிய இயேசு தோன்றப் போகும் அந்த வேளையையும் அந்த வேளையில் இந்த உலகம் எந்த நிலையில் இருக்கும் என்றும் கூறியிருந்தனர். "முடவன் மானைப் போல குதிப்பான், ஊமையன் நாவு கெம்பீரிக்கும், செவிடரின் செவிகள் திறவுண்டு போகும்!" என்று ஏசாயா கூறியதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அதை பார்த்தபோது,...அது இங்கே இருந்துகொண்டிருந்தது. நீங்கள் ஒவ்வொருவரும் அதைக் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது உண்மையிலேயே உங்களை ஆழத்தில் மூழ்க வைக்கும் என்று நம்புகிறேன். தேவன், அவருடைய ஊழியத்தில், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய ஊழியமானது எப்பொழுதும் அடையாளங்களுடனும், அற்புதங்களுடனும் இணைந்தே இருந்தது. எல்லா நேரத்திலும் காலங்கள் தோறும், தேவன் ஒரு அசைவை துவங்கும் போது அங்கே அடையாளங்களும், அற்புதங்களும் சேர்ந்தே இருந்து கொண்டிருக்கும். ஆனால் இன்று, சொல்லவே பயங்கரமாக இருக்கிறது. அமெரிக்க மக்களாகிய நாம் நம்முடைய சபைதான் பெரியது என்று சொல்லி இப்படியாக நம்முடைய சபைகளை மிகவும் தொல்லைக்குள் மாட்டி வைத்துள்ளோம், ஏழை ஜனங்களால் நாம் என்ன பேசுகிறோம் என்று கேட்க முடியாத அளவில் இது போன்ற காரியங்களை பெற்றிருக்கிறோம். வெப்ஸ்டருக்கு (Webstor) நண்பர்களாக இருந்ததைப் போல ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். (வெப்ஸ்டர் என்பவர் ஆங்கில அகராதியை உருவாக்கியவர். இந்நாட்களில் தீர்க்கதரிசியின் செய்தியில் இருந்து கொண்டிருக்கிறோம் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பிரசங்கிகள் பாமர ஜனங்கள் மத்தியில் அவர்கள் புரிந்து கொள்ள இயலாத அளவில் ஆங்கில மொழியில் பிரசங்கம் செய்து கொண்டிருப்பதை தீர்க்கதரிசி அப்படி குறிப்பிடுகிறார்). ஓ, எல்லாமே சடங்காச்சாரமாகி விட்டது. உண்மையான ஆவியினால் ஜீவனுள்ள தேவனை ஆராதிப்பதை விட்டு விட்டு மீண்டும் மீண்டும் கூறினதையே திரும்பவும் சொல்லிக்கொண்டு அல்லது அதே காரியங்களையே பெரிய கூட்டங்களில் மறுபடியும் கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மத்தியிலும், அங்கே ஒரு பண்டைய பாணியிலான எழுப்புதல் முழு உலகம் முழுவதிலும் வெடித்து கிளம்பும் ஒரு நேரமானது வந்து கொண்டிருக்கிறது. கடந்த வருடம் பத்தாயிரம் பேர்.... பேர்.... "ஞாயிறு பார்வையாளர்" (Sunday Visitor) என்ற கத்தோலிக்க சபை இதழ் ஒன்றில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர் அதில் பெந்தேகொஸ்தே சபைகளில் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பேரை கடந்த வருடம் மனமாற்றம் செய்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. நினைத்துப் பாருங்கள். ஓ, நான் அதைக் கேட்ட போது அது என் இதயத்தை துள்ளிக் குதிக்கச் செய்கிறது. 25. இப்பொழுது, பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நீங்களும் முழு சுவிசேஷக்கூட்டத்தாரும் தொல்லைக்குள் இருந்து கொண்டு சிதறிப் போனவர்களாக கத்தோலிக்க சபை, லுத்தரன் சபை, இது போன்ற வித்தியாசமான அமைப்புகளை துவங்கி பிரிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது இந்த நாட்களில் ஒரு அடையாளம் தோன்றி கொண்டிருக்கிறது. சபைகள் தங்கள் வேறுபாடுகளையும், விரைப்பு தன்மைகளையும் உடைத்துக் கொண்டு ஒரு மகத்தான ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து கொண்டிருக்கின்றன. சபை வெளியே நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அது நாம் காலத்தின் கடைசியில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதன் ஒரு அடையாளம். தேவன் அதை உரைத்திருக்கிறார். மேலும் அது இயேசுவோடு இருந்ததைப் போலவே, கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு அந்த விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாளமாக இருந்தது. "யாக்கோபுலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்" என்று அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். பிலேயாம் தீர்க்கத்தரிசி அதை தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தான். ஆகவே அங்கே ஒரு நட்சத்திரம் உதிக்கும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். மேலும் இந்த நட்சத்திரமானது பூமியிலே ஒரு இராஜா பிறப்பார் என்றும், அவர் எல்லா ஜனத்திற்கும் இரட்சகராக அவர் இருப்பார் என்பதற்கும் அது ஒரு அடையாளமாக இருந்தது. ஆகவே அவர்கள் இந்த நட்சத்திரம் தோன்றியதைக் கண்ட போது மீட்பு சமீபமாக இருப்பதை அறிந்து ஆயத்தப்படுவதற்கு ஒரு அடையாளமாக இருந்தது. 26. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களென்றால் அங்கே அவர்கள் நட்சத்திரங்களை கொண்டு நேரத்தை கணக்கிட்டு வந்தனர். எந்த ஒரு வானிலை ஆய்வுக்கூடத்திலும் ஒரு போதும் இந்த நட்சத்திரத்தைக் குறித்து எந்த ஒரு காரியமும் எழுதப் பட்டிருக்கவில்லை. வேறு யாரும் அதைக்குறித்து ஒரு போதும் எதைப் பற்றியும் எழுதியிருக்கவில்லை, யாரும் அதைப் பார்க்கவும் இல்லை. ஞானிகள் மட்டுமே அதை பார்த்துக் கொண்டிருந்தனர். காரணம் என்னவெனில் அவர்கள் அது வருவதற்காக எதிர்பார்த்து கவனித்துக் கொண்டிருந்தனர். இந்த நாளில் நாம் கவனித்துக் கொண்டிருக்கும் அதே வகையான ஒரு அடையாளமாக அது இருந்தது. கடைசி நாட்களில் "இறுமாப்புள்ளவர்களாகவும், துணிகரமுள்ளவர்களாகவும், தேவப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், இனங்காதவர் களாயும் அவதூறு செய்கிறவர்களாகவும் தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதன் வல்லமையை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை விட்டு நீ விலகு" இயேசு இப்படியாக கூறியிருக்கிறார் அல்லது வேதாகமம் இப்படி கூறுகிறது. மேலும் நமது கர்த்தரும் கூட "விசுவாசிக்கிறவர்களை உலகத்தின் முடிவு வரை இந்த அடையாளங்கள் தொடரும் அவர்கள் என்னுடைய நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள், நவமான பாஷைகளை பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவர்கள்" என்று கூறியுள்ளார். 27. கவனியுங்கள், அங்கே அநேக தவறான ஆள் மாறாட்டங்கள் இருந்து கொண்டிருந்தது. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். அங்கே இருந்த மத வைராக்கியம் மிக்கவர்கள் வெளியே சென்று விட்டனர், ஆனால் பிசாசானவன் மட்டுமே ஒரு குருட்டுத்தனத்தை வைக்க முயற்சி செய்து கொண்டிக்கிறான். அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வதற்கு ஒரு உண்மையான பரிசுத்த ஆவியானவர் அங்கே இருந்து கொண்டிருக்கிறார். அந்த நாளும், நேரமும் வந்துவிட்டது. இப்படிப்பட்ட காரியங்களை வெளியில் எறிந்து விடச்செய்வதுதான் பிசாசின் வேலையாக இருக்கிறது. இயேசு வருவதற்கு முன்பும் அவன் அதையே தான் செய்து கொண்டிருந்தான். கமாலியேல் என்கிற அந்த மகத்தான மனிதனுடைய பேச்சு உங்களுக்கு நினைவிருக்கிறதா, அப்பொழுது அங்கே தெயுதாஸ் (Justus) என்கிற ஒருவன் எழும்பி தன்னை பின்பற்றும்படியாக நானூறு பேரை வனாந்திரத்திற்குள் வழிநடத்திச் சென்றான். அவர்கள் எல்லோரும் அழிந்து போயினர். ஆனால் அங்கே உண்மையான இயேசு வந்து கொண்டிருந்தார். ஆகவே அந்த உண்மையான இயேசு காட்சியில் வந்தார். எத்தனை போலியான மத வைராக்கியம் கொண்டவர்கள் முதன்மையான இடங்களில் இருந்து கொண்டு இது அது மற்றவைகளை செய்து ஆள்மாறாட்டம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாலும் அது ஒரு விஷயமல்ல, அது உண்மையான இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்பதின் ஒரு அடையாளக் கம்பமாக இருந்தது. பிறகு அவர் வந்தபோது அவர்கள் அவரை ஏற்றுக் கொண்டனர். அவருக்காக காத்துக்கொண்டிருந்த அநேகர் அவரை ஏற்றுக் கொண்டனர். இன்றும் கூட நாம் நியாயமற்றதாக கருதும் அநேக மதக் கோட்பாடுகள், இது, அது மற்றும் பல காரியங்களை உடையவர்களாக இருக்கிறோம். ஆனால் அந்த உண்மையான இயேசு மற்றும் உண்மையான பரிசுத்த ஆவி விரைவில் இங்கே இருக்கப் போகிறதை சுட்டிக் காட்டும் ஒரு அடையாளக் கம்பாக மட்டுமே இது இருந்து கொண்டிருக்கிறது. நாம் இப்பொழுது அதில் தான் வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பிற்பகல் வேளையில் அதில்தான் நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அது உங்களைச் சுற்றிலுமாக இருந்து கொண்டிருக்கிறது. 28. அது...அந்த முழு உலகமும் பாதாள உலகத்தின் அதிகாரத்தினால், இருளின் அதிகாரத்தினால் கறைபட்டதாக இருந்து கொண்டிருக்கிறது. நாம் முழு உலகத்தையும் கவனித்து பார்த்தால், இப்பொழுது எப்படி கம்யூனிசக் கொள்கையானது சுற்றிலும் தனது வழியில் இசைவாக நுழைந்து கொண்டிருக்கிறதைக் காணலாம். இங்கு அமெரிக்காவில் வெளியே தெருவில் இறங்கி நாம் இப்படி கூற முடியும், உதாரணத்திற்கு, நான் சிறிது நேரத்திற்கு முன்பு இந்த அழகான உங்களுடைய நகரத்தில் ஒரு இடத்தை கடந்து கொண்டிருந்தேன்(மட்டுமல்ல ஆனால் என்னுடைய நகரத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும்) இந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை குழந்தை பராமப்பரிவர்களிடம் விட்டு விட்டு போர் ஆயுத தொழிற்சாலைகளில், மற்றும் இப்படிப்பட்ட காரியங்களில் வேலை செய்து கொண்டிருப்பதை நீங்கள் காணமுடியும். ஓ அது அவமானமாக இருக்கிறது. நமது அமெரிக்கப் பெண்கள் எப்பொழுதும் ஒன்றாக தைக்கப்பட்ட ஒரு ஜோடி சீருடைகளை அணிந்து கொண்டு போர் தொழிற்சாலைகளில் வேலை செய்யச் செல்கின்றனர். அது எவ்வளவாக காயப்படுத்துகிறது என்பதை நான் பொருட்படுத்தவில்லை, ஆனால் அது ஒரு அவமானமாக இருக்கிறது. அது இந்த தேசத்தின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது. உன்னுடைய அந்த சிறிய குழந்தைக்கு நீ தேவை, உன்னைப்போலவே அதை வளர்ப்பதற்காக தேவன் அதை உனக்கு கொடுத்திருக்கிறார், சில குழந்தை பராமரிப்பவர்களை அல்ல. அது சரி. 29. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, "குழந்தையை படுக்க வைத்து அழவிடுங்கள்"என்று சில மருத்துவர்கள் கூறினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் அதை போஷியுங்கள், அதை நீங்கள் தூக்கி எடுக்க வேண்டாம் அது அழுதால் அழவிடுங்கள். இருப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அதை செய்தார்கள். இது மருத்துவர்கள் மத்தியில் ஒரு பெரிய நம்பிக்கையை கொண்டுவந்தது சில நரம்பியல் சம்பந்தமான நோய்களை கண்டுபிடிக்க முடிந்தது. இயற்கையை அதன் வழியில் விட்டு விடுங்கள். எது சிறந்தது என்று தேவனுக்கு தெரியும். அந்த குழந்தைக்கு அன்பு தேவையாக இருக்கிறது. அதிலிருந்து நீங்கள் அன்பை எடுத்து விடுவீர்களானால் அதை ஒரு மோசமான ஒன்றாக செய்து விடுவீர்கள். அந்த குழந்தை அன்பைப் பெற்றுக் கொள்ளும்படியாக அதை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். தாய்மார்கள் இன்று, அடிக்கடி மதுபானக் கூடங்கள் இது போன்ற இடங்கள், மற்ற காரியங்களுக்கு செல்பவர்களாக மாறிவிட்டனர். எனவே தேசத்தின் ஒழுக்கங்கள் மற்றும் எல்லாமே உடைந்து கொண்டிருக்கின்றன. நாம் சாலையின் முடிவில் இருந்து கொண்டிருக்கிறோம். 30. நீங்கள் ஏசாயா தீர்க்கதரிசி கூறினதை வாசித்திருக்கிறீர்களா?, "அந்த நாட்களில் இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையாகவும் இருக்கும்" என்று அவன் கூறினான் அவர்கள் தப்பித்து வெளியே வந்து அதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த வானசாஸ்திரிகளின் நாட்களில் அநேக ஜனங்கள் அந்த நட்சத்திரத்தை குறித்து எந்த ஒரு கவனமும் இல்லாதவர்களாகவும்; அதைக் கவனிக்காதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் தங்கள் சொந்த வீட்டுக் காரியங்களையே கவனித்து கொண்டிருக்க வேண்டியிருந்தது. அவர்கள் சபையைச் சேர்ந்தவர்களாக இருந்து கொண்டு அதில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாக இருந்தனர். இப்படிப்பட்ட காரியங்களுக்கு அவர்களுக்கு நேரம் இல்லை. ஆனால் அந்த சாஸ்திரிகள் வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்தனர், மேலும் அந்த நட்சத்திரம் தோன்றப் போகிறது என்பதை அறிந்தவர்களாய் அதையே நினைத்துக் கொண்டு இரவும் பகலும் அதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். மேலும் இந்த நாளிலும் கூட இந்த உலகத்தில் கர்த்தருடைய வருகையின் அந்த அடையாளங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் ஸ்திரீகளும் அந்த எழுப்புதல் வெடித்துக் கிளம்புதைக் காண்கிறார்கள். அவர்களுடைய இதயங்கள் மலர்ந்து சந்தோஷத்தினால் மகிழ்ச்சி அடைய ஆரம்பித்திருக்கின்றன. 31. அந்த ஞானிகளைக் குறித்து இங்கே ஒரு கணம் சிறிய நாடக காட்சியை நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். அவர்கள் அனைவரும் இப்படிக் கூறிக் கொண்டிருப்பதை பார்க்கமுடிகிறது. சரி. இப்பொழுது உதாரணத்திற்கு அவர்கள் மூவரையும் எடுத்துக் கொள்வோம். அந்த மூன்று ஞானிகளும் காம், சேம், மற்றும் யாப்பேத்- னுடைய ஜனங்கள் என்று நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நட்சத்திரம் தோன்றியதை அவர்கள் பார்த்த போது அவர்களில் சிலர் சென்று நிறைய பொருட்களை எடுத்து வைத்துக் கட்டிக் கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. "இப்பொழுது, நாம் ஒரு திசை காட்டும் கருவியை எடுத்துக் கொள்வோம், இதை எடுத்துக் கொள்வோம் மற்றும் அதை எடுத்துக் கொள்வோம், அந்த நட்சத்திரத்தை தொடர்ந்து அதனோடு நாமும் செல்வோம்" என்று அவர்களால் சொல்லவில்லை. ஆனால் அங்கே ஒருவன் இருந்தான் அவனுக்கு எதையும் கட்டிக்கொண்டிருக்க நேரம் இல்லை. இன்று மக்கள் எங்காவது செல்வதற்கு கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இன்று ஜனங்களை எச்சரிப்பதற்கு நான் ஒரு சத்தத்தை உடையவனாக இருந்தால், "எதையும் கட்டிக்கொண்டிருக்க வேண்டாம், ஆனால் எல்லாவற்றையும் இறக்கி வைத்து விட்டுச் செல்ல தயாராகுங்கள்" என்று என்னால் கூற முடியும் இது சுமைகளை இறக்கி வைக்க வேண்டிய நேரமாக இருக்கிறது. ....பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும், தள்ளிவிட்டு...நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோட ஓடக்கடவோம்." என்று வேதாகமம் சொல்கிறது. மனிதர்களும், ஸ்திரீகளும் இந்த சபையில் அல்லது அந்த சபையில் சேர்ந்து கொள்ள முயற்சி செய்கின்றனர், அல்லது இதை அல்லது அதை எடுத்துக் கொள்கின்றனர். சரி, "அவர்கள் அந்த சபையில் சீட்டு விளையாட்டு விளையாட முடியும். அவர்கள் நம்முடைய சபையில் அப்படி செய்ய முடியாது. அந்த சபையில் மட்டுமே அதைச் செய்ய முடியும் அவர்களால் நம்முடைய சபையில் அப்படி செய்ய முடியாது. நீங்கள் பொருட்களை கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் சுமையை இறக்கி வையுங்கள். உங்களுடைய தொல்லைகளை நீங்களை இறக்கி வைத்துவிட்டு தேவனுக்கு முன்பாக கீழே இறங்கி வாருங்கள். அந்த நேரமானது மிகவும் அருகில் இருக்கிறது. 32. ஆனால் இந்த மனிதனை பார்க்கிறேன்.... "இங்கே கவனியுங்கள் ஜான்" என்று அவனுடைய மனைவி கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. நாம் அவனை ஜான் என்று அழைப்போம் (நமது கதாபாத்திரம்) "ஏன் நீங்கள் திசைகாட்டும் கருவியை வைத்துக் கொள்ளவில்லை, உங்களிடம் எந்த ஒரு கருவியும் இல்லையே, நீங்கள் இங்கே கீழ்திசை நாடுகளில் எப்படி வழியைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள். எருசேலேமுக்கு மேலாக, பாலஸ்தீனத்திற்கு மேலே வானம் முழுவதும் நட்சத்திரங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இந்த சதுப்பு நிலங்களையும், பாலைவனங்களையும் மலைகளையும் கடந்து எப்படி அங்கே செல்லப் போகிறீர்கள்? "மனைவியே நான் எந்த ஒரு திசைகாட்டும் கருவியையும் என்னுடன் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. தேவன் எனக்கு ஒரு திசைகாட்டும் கருவியை கொடுத்திருக்கிறார். அந்த நட்சத்திரம் அடிவானத்தில் அருகே இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே குழந்தையாகிய கிறிஸ்துவிடம் என்னை அழைத்துச் செல்ல தேவன் அளித்த வழியாக அது இருக்கிறது, அவர் சொல்வதைக் கேட்டு நான் அந்த நட்சத்திரத்தை பின்பற்றி செல்வேன்" இப்படி அவன் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 33. மேலும், இன்று நாம் சபைக்கு ஓடிச் சென்று, "இதுதான் செய்தியா?" "செய்தி இவ்வளவுதானா?" என்று எதையாவது கூற முயற்சித்து கொண்டிருக்கிறோம். தேவன் நமக்கு நித்தியமான ஒரு நட்சத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாக இருக்கிறது. அவரே ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு வழிகாட்டியாக இருந்து, அவர்களை சத்தியத்திலும், எல்லா வெளிச்சத்திற்குள்ளும் வழி நடத்துகிறார். ஆமென் (நான் உங்களிடத்தில் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்பொழுது அது மிகவும் வலிமையாக இருந்து கொண்டிருக்கிறது. மேலும் அதற்கு கொஞ்சம் ஆதரவு அளித்தேன். கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் வரும் போது, அவர் எல்லா சத்தியத்திற்குள்ளாகவும் உங்களை வழி நடத்தி, வரப் போகிற காரியங்களை உங்களுக்குக் காண்பிப்பார். அது தான் இந்த நாளுக்குரிய சபையின் அடையாளமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் எங்கே அசைவாடிக் கொண்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் எங்கே அசைவாடிக் கொண்டிருக்கிறாரோ அங்கே நீங்கள் அன்பையும், மகிழ்ச்சியையும், அடையாளங்களையும், அற்புதங்களையும் தேவனோடு இணைந்திருப்பதையும் காண்பீர்கள். தேவனுடைய வல்லமையானது அவருடைய ஜனங்களின் மத்தியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுந்த வல்லமையை காண்பித்துக் கொண்டிருக்கும். "நான் என் பிதாவினிடத்திற்கு போகிற படியினால் நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இதைவிட பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்" என்று இயேசு கூறினார். ஆகவே இயேசு செய்த காரியங்கள் அந்த ஜனக்கூட்டத்தாருடன் இருந்து வருவதை நீங்கள் காண்பீர்கள். 34. வெளி உலகமானது கர்த்தராகிய இயேசுவை கேலி செய்ததைப் போலவே அந்த ஜனங்களையும் கேலி செய்து கொண்டிருப்பதை காண்பீர்கள். அது சரியே. ஆவி மரிப்பதில்லை. இயேசு அந்த பரிசேயர்களிடம் "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டாவனர்கள்" என்று கூறினார். அது சரிதான். தேவன் தன்னுடைய மனிதனை எடுத்துக் கொள்கிறார். ஆனால் ஒரு போதும் தம்முடைய ஆவியை எடுத்துக் கொள்வதில்லை. அவர் எலியாவை எடுத்துக் கொண்ட போது அந்த ஆவியானது யோவான்ஸ்நானகன் மேல் வந்தது. அதே ஆவி; அவர் தம்முடைய குமாரனாகி இயேசு கிறிஸ்துவை எடுத்துக் கொண்ட போது அதே ஆவியானது இன்று சபையில் அசைவாடிக் கொண்டிருக்கிறது. அன்றைய நாட்களில் இருந்த பரிசேயர்களும், மத வைராக்கியம் கொண்டவர்களும் வெளியே சென்று இவை போன்ற அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, பரிகாசம் செய்து அவர்களை படிப்பறிவில்லாத ஒரு கூட்ட ஜனங்கள் என்று விரல்களை சுட்டிக் காண்பித்து கேலி செய்தனர். இன்றும் கூட அதே ஆவியானது மனிதர்கள் மற்றும் ஸ்திரீகளின் மீது ஜீவித்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் அவரால் ஜனங்களுடைய எண்ணங்களை பகுத்தறிய முடிந்தது, அவர்களுடைய நோய்களை குணமாக்கி இது போன்றவைகளை செய்ய முடிந்தது. அவர்கள் அவரை பிசாசு பிடித்தவன் (Beelzebub) என்று அழைத்தனர். இயேசு உடனடியாக திரும்பி, பிசாசானவன் பிணியாளிகளை குணமாக்க முடியாது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படியாக, "சாத்தானை சாத்தான் துரத்தினால் அவனுடைய இராஜ்யம் பிரிந்திருக்கும்" என்றார். பிசாசானவனால் நோயை குணமாக்க முடியாது, பிசாசு ஒரு போதும் நோய்களை குணப்படுத்தியதில்லை. அவனால் முடியாது, அப்படிச் செய்தால் அவன் தன் சொந்த ராஜ்யத்தையே இடித்துப் போடுவதாக இருக்கும். ஏனென்றால் பிசாசானவன் உங்கள் மேல் வியாதியை மட்டுமே கொண்டு வரமுடியும், தேவன் அதை எடுத்துப் போடுவார். எனவே சாத்தானால் சாத்தானை விரட்ட முடியாது. அவனால் அப்படிச் செய்ய முடியாது என்று கூறினார். ஆனால் அதைக் குறித்து அவர்கள் அவரை குற்றம் சாட்டினர். அது என்னவாக இருக்கிறது? அது அந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. இன்றும் அது அப்படித்தான் இருக்கிறதல்லவா? முடிவு காலத்தின் அதே மாதிரியான ஒரு அடையாளமாக இருக்கிறது. 35. இவையெல்லாம் என்ன என்று இப்பொழுது நாம் ஆச்சரியமடைகிறோம். வேதாகம காலத்தில் அவர்களுக்கு இந்த அரங்கத்தைப் போல, ஒரு பெரிய தாழ்வாரத்தின் கீழே ஆட்டுச்சந்தையின் அருகில் பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் இருந்தது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் சுற்றிலும் அங்கே படுத்திருந்தனர். முடமானோர், சப்பாணிகள், சூம்பின கை உடையவர்கள் அங்கு இருந்து கொண்டு, தண்ணீரானது எப்பொழுது கலங்கும் என்று காத்துக் கொண்டிருந்தனர் மேலும் ஒவ்வொரு மனிதனும் படுத்திருந்தான். ஓ...நான்.. அவர்களுடைய கண்கள் சரியாக அந்த தண்ணீரின் மேலேயே இருந்தன. ஏதாவது ஒரு வழியில் ஒரு சிறிய அசைவு தண்ணீரின் மீது அசையும் போது யாரோ சிலர் சுகமடையப் போகிறார்கள் என்பதற்கான ஒரு அடையாளமாக இருந்தது. அந்த தண்ணீர் கலங்கின பின்பு முதலில் உள்ளே இறங்குபவர் எப்படிப்பட்ட வியாதி உடையவராக இருந்தாலும் அவர்கள் குணமடைந்து விடுவார்கள். அங்கே இருந்த அந்த ஆயிரக்கணக்கானவர்களின் கண்களும் அந்த தண்ணீரின் மீதே சரியாக பார்த்துக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? மற்றவர்களோ நடந்து சென்று "அங்கே அதில் அப்படி ஒன்றுமில்லை" என்று கூறினர். ஆனால் யார் நம்பிக்கை வைத்திருந்தார்களோ அவர்கள் அந்த தண்ணீர் கலங்குவதற்காக அதையே கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த தண்ணீர் அசைய துவங்கும் போது அந்த தண்ணீர் கலங்கின போது அங்கே தேவன் இருக்கிறார் என்றும் ஏதோ அங்கே நடக்கப் போகிறது என்பதற்கும் அது ஒரு அடையாளமாக இருந்தது. ஆகவே இன்றும் நான் அந்த அசைவை கவனித்துக் கொண்டிருக்கிறேன். எப்படி? வேதாகமத்தில் தண்ணீரானது எப்பொழுதும் ஜனங்களைக் குறிக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. திரளான ஜனக்கூட்டம் என்று வெளிப்படுத்துதல் 17:17 கூறுகிறது. எப்பொழுதும் ஜனங்கள் மத்தியில் ஒரு அசைவை காண்கிறீர்கள். ஒன்றாக இணைந்து வருகிற ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அது என்னவாக இருக்கிறது? தேவன் சில காரியங்களை செய்வதற்கு தயாராக இருந்து கொண்டிருக்கிறார் என்பதின் ஒரு அடையாளமாக அது இருக்கிறது. 36. ஒரு அசைவை நான் பார்க்கிறேன். ஒரு முறை தாவீது யுத்தத்திற்குச் சென்றிருந்தபோது அவன் அங்கே படுத்துக் கொண்டிருந்தான். ஓ பெலிஸ்தியருடன் எனக்கு இருக்கும் எதிர்ப்பை கவனியுங்கள், எனக்கு முன்பாக என்ன இருக்கிறது என்று பாருங்கள் தேவனிடத்திலிருந்து ஏதாவது அடையாளம் எனக்கு கிடைக்கும் வரையிலும் நான் போக முடியாது." என்று கூறிவிட்டு அங்கே அவன் படுத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு முசுக்கொட்டை புதர்களின் ஊடாக ஒரு அசைவு சென்று கொண்டிருந்ததை அவனால் கேட்க முடிந்தது. அவன் தன் பட்டயத்தை இறுக பிடித்து உயர்த்தியவாறு, "இப்பொழுது போகலாம்" என்று கூறினான். தேவன் அவனுக்கு முன்பாக சென்று கொண்டிருந்ததை அவன் அறிந்து கொண்டான். ஒரு அடையாளம் அவனுக்கு முன்பாக சென்று கொண்டிருந்தது. சகோதரர்களே, இன்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எப்பொழுதாவது அங்கே காலம் என்ற ஒன்று இருந்திருந்தால், என்னால் நினைவு கூற முடியும், அல்லது வரலாற்றிலிருந்து என்னால் வாசிக்க முடியும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மறைவுக்கு பிறகு இந்த முதல் யுகத்தில் அந்த பரிசுத்த ஆவியானவரின் வருகை வந்து கொண்டிருக்கும் நாள் இருக்குமானல் அது இந்த நாளில்தான் இருந்து கொண்டிருக்கிறது. அங்கே அது ஒரு அடையாளமாக இருக்கிறது. அங்கே முசுக்கொட்டை செடிகளின் நடுவில் ஒரு அசைவு சென்று கொண்டிருக்கிறது. தேவன் இந்த தேசங்களின் ஊடாக அசைந்து சென்று கொண்டிருக்கிறார் நாம் இறுதி காலத்தில் இருப்பதற்கான உறுதியான அடையாளங்களும் அற்புதங்களும் தோன்ற துவங்கி விட்டது. இந்த உலகம் இதுவரையில் கண்டிராத மகத்தான ஒரு எழுப்புதலில் நாம் இப்பொழுது ஒன்றிணைந்து கொண்டிருக்கிறோம். எப்பொழுதும் உலகம் கண்டிராத மனிதகுலம் அனைத்தையும் தாக்கவிருக்கும் ஒரு மிகப்பெரிய அழிவுக்குள்ளாக சரியாக நாம் இப்பொழுது இருந்து கொண்டிருக்கிறோம். 37. இப்பொழுது அவர்களுக்கு, எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை, கிறிஸ்து இல்லாதவர்களுக்கும், தேவன் இல்லாதவர்களுக்கும் இந்த உலகம் இழக்கப்பட்டு போய், நீங்கள் பரிதாபமான ஒரு நிலையில் இருந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு மீட்பானது நெருங்கி வந்து கொண்டிருக் கிறதற்காக நீங்கள் மகிழ்ச்சியுடன் உங்கள் தலைகளை உயர்த்தி பார்க்க முடிகிறதாக அது இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இங்கே சிகாகோ நகரத்தில் உங்களுக்கு ஒரு மகத்தான அடையாளம் உண்டாயிருந்தது "கடைசி நாட்களில் அலைகள் முழக்கமாக இருக்கும், தேசங்களுக்கு இடையில் துயரங்கள் சூழ்ந்து குழப்பமான ஒரு காலத்திற்குள் சென்று விடும்" என்று இயேசு கூறியுள்ளார். அது என்னவாக இருக்கிறது? இந்த ஆழிப் பேரலைகளைப் பற்றி பேசுகையில் (உலகின் அனைத்து வரலாற்றிலும் இது அறியப்படாத ஒன்றாக இருக்கிறது) இந்த பெரிய ஆழிப் பேரலைகள் எப்பொழுதும் கடைசி நாட்கள் வரையிலும் இப்படியாக உடைத்துக் கொண்டே இருக்கும். ஒரு ஆழிப் பேரலையைத் குறித்து இந்த பிரசங்க மேடையில் இருந்து தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்டிருக்கிறது). சரியாக சிகாகோ நகரத்தை தாக்கி நிலைகுலையச் செய்து, சிகாகோ நகரத்தின் மேலேயும், கீழேயுமாக சென்று கரையோரங்களில் உள்ள ஜனங்களை வீசி எறிந்து முற்றிலுமாக கொன்று போடும் என்று இந்த பிரசங்கமேடையில் இருந்து தீர்க்கத்தரிசனமாக முன்னுரைக்கப் பட்டுள்ளது. எந்த ஒரு விஞ்ஞானமும் கூட அதை கணிக்க முடியாது. "ஒரு காற்று கீழே வந்திருக்கும்" என்று வேண்டுமானால் நாம் கூறலாம். இந்த உலகத்தில் எப்படி இந்த காற்றானது வீசுகிறது? இந்த காரியங்கள் எல்லாம் எப்படி நிகழ்கிறது? அது சிகாகோ நகரத்தை நோக்கி அசைந்து சென்று கொண்டிருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவனுடைய விரலாக இருக்கிறது. இறுதி நேரம் நெருங்கி விட்டது வரவிருக்கும் கோபாக்கினையில் இருந்து நீ தப்பித்துக் கொள் என்று அது உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது. 38. இங்கே இருக்கின்ற இந்த மகத்தான பெரிய நகரமானது உலகத்தின் மற்ற பகுதிகளைப் போல ஒழுக்க கேடுள்ளதாக மாறிப் போய்விட்டது. இந்த நாட்களில் உங்களால் இரக்கத்தை பெற்றுக் கொள்ள முடியாது; நீங்கள் நியாயத்தீர்ப்பைத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். தேவனுடைய கரமானது இரக்கத்தில் அசைந்து கொண்டிருக்கும் போது, மேலும் அந்த கதவுகள் இப்பொழுது திறந்தே இருக்கும் பொழுது அதற்குள் ஓடி சென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாப்பாக இருந்துகொள். அது ஒரு அடையாளமாக இருக்கிறது. மேற்கு கடற்கரை பகுதியின் மேலே எழும்பும் அந்த சத்தத்தை கவனியுங்கள். இங்கே சமீபத்தில் அந்த பெரிய ஆழிப் பேரலைகள் எப்படி தாக்கியது. எப்படியாக அந்த அடையாளங்கள், பூமி அதிர்ச்சிகள், குழப்பமான நேரங்கள், தேசங்களுக்கு இடையில் துன்பங்கள், அதை இந்நாளில் கவனித்துப் பாருங்கள். கவனியுங்கள், தேசங்களுக்கிடையில் உள்ள துன்பங்கள் பற்றி பேசப்படுகின்றது, அங்கே எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை... நீங்கள் இந்தநாளில் உங்கள் நம்பிக்கையை இயேசு கிறிஸ்துவுக்கு வெளியே எதன்மீதும் வைக்க முடியாது. 39. எடி பெர்னட் இப்படி எழுதியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். இயேசுவின் இரத்த ஊற்றைத் தவிர (நான் அறிந்ததெல்லாம் அதைப்பற்றி மாத்திரமே) வேறே ஊற்றை நான் அறியேன், இதுவே எனது நம்பிக்கையும் ஆதரவும் இயேசுவின் இரத்தம் அன்றி வேறு நம்பிக்கை இல்லை. நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான் வேறு அஸ்திவாரம் மணல்தான் வேறு அஸ்திவாரம் மணல்தான் நீங்கள் உங்கள் நம்பிக்கைகளை உங்கள் சபையின் மீது கட்டுவீர்களென்றால், உங்கள் நம்பிக்கைகளை உங்கள் நகரத்தின் மீது கட்டுவீர்களென்றால், இவைகள் எல்லாமே மணலுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. இந்த தேசத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நான் அழித்துப் போட முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. இல்லை, ஐயா. நான் ஏதாவது காரியத்தை செய்ய முயற்சிக்கிறேன் என்றால் என்னால் ஜனங்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை சரிசெய்ய முடியும் என்றால் பிறகு இந்த தேசமும் சரியாக இருக்கும். 40. ஜோன் ஆப் ஆர்க் (Joan of Arc)-ன் நாட்களில் பிரான்ஸ் தேசத்தில் ஒரு புரட்சி நடந்தது. (காரியங்களை சரி செய்வதற்கு அவர்களுக்கு ஒரு புரட்சி தேவைப்பட்டது). அவர்கள் அந்த புரட்சியை நடத்திய பிறகு அவர்களிடம் இருந்த அந்த காரியங்களை சரி செய்வதற்கு ஒரு எதிர் புரட்சியை அவர்கள் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருந்தனர். சமீபத்தில் நாம் ஜனநாயகத்திற்காக போராடிக் கொண்டிருந்தோம். சர்வாதிகாரம் அல்லது ஜனநாயகம். என்பதில், ஜனநாயகமே வென்றது. ஜனநாயகமே சரியானதாக இருக்கிறது. நான் ஜனநாயகத்தை நம்புகிறேன். எனவே அதில் நம்பிக்கை வைக்காவிடில் நான் இங்கே வாழ முடியாது. ஆனால் நான் இங்கு வசிக்கிறேன். ஆகவே நான் அதை நேசிக்கிறேன். நான் ஜனநாயகமே சிறந்தது என்று நினைக்கிறேன். ஆனால் இன்று நமக்கு என்ன தேவை என்றால் வெள்ளை மாளிகையில்b(White House-அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகம்) பண்டைய கால பாணியிலான ஒரு எழுப்புதலும், கூடவே, ஜனநாயகம் என்று அழைக்கப்படுவதற்கான சரிசெய்யப்பட வேண்டிய சில காரியங்களுமே தேவையாக இருக்கிறது. அதுவே முற்றிலும் சரியானதாக இருந்து கொண்டிருக்கிறது. இன்று நமக்கு ஒரு எதிர் புரட்சியும், நமக்குள் இருக்கின்ற இந்த தேவபக்தியற்ற சில காரியங்களை நிறுத்திவிட்டு சரி செய்வதற்கான ஒரு எதிர் யுத்தமுமே தேவைப்படுகிறது. மனிதர்கள் குடித்து விட்டு தெருக்களில் நடந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள், போதுமான அளவுக்கு குடிக்க வைத்து விட்டு பிறகு குடித்ததற்காக அவனை கைது செய்கிறார்கள். இது சரியா என்று நீங்கள் நினைத்துப் பார்க்க முடிகிறதா? அது முற்றிலும் தவறாக இருக்கிறது. அதுதான் இன்றைய விஷயமாக இருக்கிறது. அது மட்டுமல்ல; இன்னும் ஆயிரக்கணக்கான மற்ற காரியங்களையும் இந்த பிற்பகல் வேளையில் இந்த பிரசங்க மேடையில் இருந்து நாம் சுட்டிக் காண்பிக்க முடியும். 41. இது என்னவாக இருக்கிறது? இது சாலையில் உள்ள அடையாள கம்பமாக இருக்கிறது. நாம் முடிவு காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான ஒரு அடையாளங்களாக அருகில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பாருங்கள், இந்த எல்லா குழப்பங்களுக்கு நடுவில், எல்லாவற்றிற்கும் நடுவில் சர்வ வல்லமையுள்ள தேவன்தாமே தம் ஜனங்களின் மத்தியில் அசைவாடிக் கொண்டு மீண்டுமாக ஒரு பேழையைக் கட்டிக் கொண்டிருக்கிறார். இந்த பேழையானது என்னவாக இருக்கிறது? தங்களுடைய நெற்றியில் தேவனுடைய முத்திரையைத் தரித்துக் கொள்ளாத எல்லோரையும் அழித்துப் போடுவதாக இருக்கிறது. இந்த வெப்பமான சீதோஷ்ண நிலையைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். அங்கே ஒரு நேரமானது இருக்கப் போகின்றது என்று வேதாகமம் முன்னுரைத்துள்ளது. அப்பொழுது மனிதர்கள் தரையில் குழிகளை தோண்டி, வெப்பத்தில் இருந்து தங்களை மறைத்துக் கொள்ளும்படியாக அதற்குள் நுழைந்து கொள்ள முயற்சிப்பார்கள் என்று வேதாகமத்தில் அவர் முன்னுரைத்திருக்கிறார். 42. சமீபத்தில் அரிசோனாவின் பீனிக்ஸ் நகரத்தில் நின்று கொண்டிருந்தேன். நாங்கள் அங்கே இரண்டு நாட்கள் காட்டுப் பகுதிக்குள் பன்றி வேட்டைக்காக ஓய்வு எடுக்க சென்றிருந்தோம். அங்கே தலைமைக் காவலர் நின்று கொண்டிருந்தார். "சகோதரர் பிரன்காம் அவர்களே, என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார். "நான் சிறுவனாக இருந்த போது பீனிக்ஸ்-ல் மார்ச் மாதம் முழுவதும் பசுமை நிறமாக இருக்கும்" என்றார். மேலும் அவர் "இப்பொழுதெல்லாம் வருடம் முழுவதுமே பசுமை நிறம் இருப்பதில்லை, அங்கே குறைவான ஒரு நீர்ப்பாசனம் மட்டுமே இருந்து வருகிறது" என்று கூறினார். மேலும் "நீங்கள் குழாயின் மூலம் பிளாக்ஸ்டாப்-ற்கு எங்கேயிருந்தாவது கொண்டு செல்ல வேண்டும்" என்று கூறினார். அது அஜோ-வை (Ajo என்பது அரிசோனா-Arizona மாநிலத்துடன் இணைக்கப்பட்ட ஒரு இடம்) சுற்றி கீழே இருந்து மேலே எழும்பி வருவதை நான் கவனித்தேன்" என்றார். 43. இப்பொழுது தெற்குபகுதியானது எரிந்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன். க்ளுவிஸ்டன் (Clowiston) ப்ளோரிடா (Florida) மற்றும் சுற்றிலும் உள்ள பெரிய ஏரிகள் வடக்கு நோக்கி செல்லச் செல்ல முழுவதுமாக நீரூற்றுகள் எல்லாம் வறண்டு போய்க் கொண்டிருக்கின்றன மற்றும் அங்கே கடந்த வாரம் புளோரிடாவில் உள்ள ஒரு பிரபல பத்திரிகையில் விரைவில் மியாமி (Myammi) ஒரு பேய் நகரமாக மாறிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் க்ளுவிஸ்டன் (Clewwiston) முழுவதும், ப்ளோரிடாவை சுற்றிலும் அவர்கள் எல்லாரும் இந்த தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. (அவர்களுக்கு அதிகளவில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் அவை உப்புத்தண்ணீராக இருக்கிறது). மேலும் அவர்கள் குடிப்பதற்கும் மற்ற பயன்பாட்டிற்கும் இந்த நல்ல நீரைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் மக்கள் தொகையானது புளோரிடாவின் மத்திய பகுதியை சுற்றிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்கள் அங்கு உள்ள அந்த ஏரி தண்ணீரை தங்காளகவே எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் அதை அங்கே கீழே கொண்டு செல்ல முடியாது. மற்றும் பெரிய இடங்கள் எல்லாம் வறண்டு போய்க் கொண்டிருக்கின்றன. தேசம் முழுவதும் விவசாயிகள் தண்ணீரை வண்டியில் வைத்து இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். அது என்னவாக இருக்கிறது? தேவன் நோவாவின் நாட்களில் பெரிய நீருற்றுகள் எல்லாம் பிளந்து ஏராளமான தண்ணீரானது உலகத்தை அழிக்க ஏதுவாக இருந்தது. இந்த நாளில் அந்த அடையாளமானது, அவர் அதை தண்ணீரினால் இனி அழிப்பதில்லை ஆனால் நெருப்பினால் அதை சுட்டெரிப்பார். நியாயத்தீர்ப்பு மிகவும் சமீபமாக இருக்கிற படியினால், வறண்டு போய்க் கொண்டிருக்கிற இந்த காரியங்கள் எரிந்து போகும் நாளுக்கென்று தயாராகிக் கொண்டிருக்கிறது. இரக்கம் புறக்கணிக்கப்பட்டு விட்டது, தேவனுடைய வேதாகமம் கடந்து சென்று விட்டது, அவருடைய ஜனங்கள் மத வெறியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் நியாயத்தீர்ப்பிற்காக அவருடைய விரல்களை கீழ் நோக்கி சுட்டிக் காட்டும் அந்த நேரமானது வந்து கொண்டிருக்கிறது. ஆமென் அது சரியே. 44. இப்பொழுது நமது நாட்களில்...இந்த அடையாளத்தை சுற்றிலுமாக கவனித்துப் பார்த்து, இந்த காரியங்கள் எப்படி இருக்கும் என்று நாம் பார்க்கிறோம். ஜனங்கள் எப்படி இருப்பார்கள் என்றும், தீர்க்கத்தரிசிகள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம் இவற்றை நீண்ட நேரம் தொடர்ந்து பார்ப்பதற்கு நமக்கு நேரம் இருக்குமானால் நன்றாக இருந்திருக்கும் அதை பிறகு பெற்றுக்கொள்வோம். இப்படிப்பட்டதான காரியங்கள் நடந்து கொண்டிருப்பதை பார்த்த பிறகு, வெளிநாடுகளில் இருந்து திரும்பிவந்து தேவ குமாரனுடைய வருகையை குறித்து அதிக நேரம் ஒதுக்கி என்னுடைய நேரத்தை எடுத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறேன். நேரமானது மிகவும் அருகாமையில் வந்து கொண்டிருக்கிறதை அறிந்து, இந்த காரியங்கள் எல்லாம் நடந்து கொண்டிருப்பதை அறிந்து அதன் பின்னர் எது சரி, என்பதை அறிந்த பின்பு ஜனங்களை எச்சரிக்க தவறினால் நான் குற்றமுள்ளவனாக இருப்பேன். ஆகவே நான் திரும்பி வந்த பிறகு இந்த முறையில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். 45. இங்கே சில காலத்திற்கு முன்பு...உங்களுக்கு கொடுக்க தவறிவிட்டேன். இப்பொழுது, நீங்கள் எப்பொழுதுமே கேள்விப்பட்டிராத அந்த மிகப் பெரிய அடையாளத்தை உங்களுக்கு கொடுப்பதற்கு நான் முடிவு செய்திருக்கிறேன். நான் உங்களுக்கு காண்பிக்கப் போகும் அந்த காரியங்களில் ஒன்று எழுப்புதல் ஆகும். அது சற்று உடைக்கப் போகிறது. புறஜாதிகளே, எனக்கு செவி கொடுங்கள். யூதர்களே நீங்களும் கூட ஒரு கணம் எனக்கு செவி கொடுங்கள் இஸ்ரவேலே, சோர்ந்து போகாதே. உன்னுடைய நேரம் நெருங்கிவிட்டது. மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்று எப்பொழுதுமே வேதாகமத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்த யூதர்கள் எங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள், இப்பொழுது அந்த யூதர்கள் எங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். வாரத்தில் இது எந்த நாள் என்று நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் நாட்காட்டியை கவனியுங்கள். நீங்கள் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள விரும்பினால், தேவன் எப்பொழுதும் கொடுத்ததில் அந்த மகத்தான அடையாளமாகிய யூதர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர் கூறியபடியே அவர்கள் சகல ஜனங்களுக்குள்ளும் சிதறடிக்கப் பட்டிருந்தனர். 46. இங்கே சில நாட்களுக்கு முன்பு ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன், மேற்கு கடற்கரையிலிருந்து வந்திருந்த சகோதரர் ஆர்கன் ப்ரைட் (Bro Argon bright) (ஒருவேளை அவர் பிற்பகல் இந்த கூட்டத்தில் இருக்கலாம்) கிறிஸ்தவ வர்த்தக மனிதர்களின் மத்தியில் அவர் நன்கு அறியப்பட்ட ஒருவர். மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் இஸ்ரவேல் தேசத்தில் இருந்தார். கர்த்தருக்கு சித்தமானால் இப்பொழுதிலிருந்து ஆறு வாரங்களில் அங்கே நாம் இருப்போம். இப்பொழுது இஸ்ரவேல் தேசத்தில் அவர்கள் அந்தப் படங்களை எடுத்திருந்தனர். அவர் அதை "நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள்" அல்லது ஒரு படக்காட்சி என்று அழைத்தார். மேலும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். அதன் பிறகு புகைப்படக்கருவியை (Camera) இஸ்ரவேலுக்கு நேராக திருப்பி, அந்த எபிரேய தீர்க்கதரிசி, கடைசி நாட்களில் என்ன நடக்கும் என்று கூறினாரோ இந்த கடைசி நாட்களில் அது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. "பாலைவனம் ரோஜாவைப் போல மலரும்" என்று ஏசாயா தீர்க்கத்தரிசி சொல்லியிருக்கிறார். ஆகவே பாலஸ்தீனத்தில் உள்ள அந்த பாலைவனம் ஒரு பெரிய மலர் தோட்டமாக மாறிவிட்டது. அந்த யூத ஜனங்கள் எவ்வாறு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர், பசியுடன் உள்ள சிறுவயது குழந்தைகளும், தாய்மார்களும், இளைஞர்களும் வெளியே சென்று தங்கள் கைகள் நிறைய கற்களை எடுத்துவந்து அந்த பாலைவனத்தின் ஒரு பகுதியில் வைத்து அல்லது அவற்றைக் கொண்டு அவர்களுக்கு வேலியை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அது கடினமாக இருக்கிறது ஆனால் என் நண்பனே, அது என்னவாக இருந்தது? அவர்களுக்கு தேசம் இல்லாமல் இருந்தது. அவர்கள் தேசங்களுக்குள் சிதறடிக்கப்பட்டிருந்தனர், அவர்கள் இதற்கு முன்பு எந்த இடத்தையும் வீடு என்று அழைக்க முடியாமல் இருந்தனர். இப்பொழுது அவர்கள் எந்த இடத்தையும் வீடு என்று அழைக்க முடிகிறது. 47. கவனியுங்கள், அவர்களை வெளியே துரத்தவும் மேலும் அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கவும் பார்வோனுடைய இதயத்தை தேவன் எவ்வளவாக கடினப்படுத்தியிருந்தார். தேவன் எவ்வளவாக ஹிட்லருடைய இருதயத்தை கடினமாக்கினார், கவனியுங்கள் தேவன் எவ்வளவாக அந்த யூதர்கள் ஓடிக் கொண்டேயிருக்கும் படியாக தேவன் ஸ்டாலின், முசோலினி இவர்களின் இதயத்தை கடினமாக்கியிருந்தார். அவர்களுக்கு தேசம் இல்லாமல் இருந்தது அவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டனர். "அவனுடைய இரத்தப்பழி எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் மீதும் இருக்கட்டும்" என்று அவர்கள் கூறியதில் ஆச்சரியம் இல்லை அது அப்படியே நிகழ்ந்துவிட்டது, ஆனால் தேவன் அவர்களை ஒருபோதும் மறந்து விடவில்லை. அவர்களுக்கு பிரசங்கிப்பதற்கு இன்னும் மூன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. மேசியா வரவேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது, மேலும் அந்த தானியேலின் எழுபது வாரங்களின் மத்தியில் அவர் சங்கரிக்கப்பட வேண்டியதாக இருந்தது. அவர் மூன்றரை வருடங்கள் யூதர்களுக்கு மட்டும் பிரசங்கித்தார். அவர் ஒரு போதும் புறஜாதிகளிடத்திற்கு செல்லவே இல்லை, ஆனால் யூதர்களிடம் சென்றார். பிறகு சுவிசேஷம் அவர்களுக்கு பிரசங்கிக்கப்பட்டு அவர்கள் கிறிஸ்துவுடன் ஒப்புரவாகும்படியாக அவர்களுக்கு இன்னும் மூன்றரை ஆண்டுகள் விடப்பட்டிருக்கிறது. புறஜாதிகளை ஒழுங்கின்படி திரும்பவும் உள்ளே கொண்டு வருவதற்காக அவர்கள் அங்கே குருடாக்கப்பட்டிருந்தனர். 48. இப்பொழுது, கவனமாக கேளுங்கள். அங்கே அவர்கள் ஈரான் தேசத்திலிருந்து வெளியே கொண்டு வரப்படுகிறார்கள். நீங்கள் உங்கள் செய்தித்தாள்களில் வாசிப்பீர்களென்றால், உலகம் முழுவதிலிருந்தும் கப்பல்கள் மூலமாகவும், விமானங்கள் மூலமாகவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் எருசலேம் நகரத்திற்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். பாலைவனங்களில் இருந்து கற்களை எடுத்துக் கொண்டுவந்து குவியலாக வைத்துக் கொண்டிருக் கிறார்கள். வறண்ட நிலமாக இருந்த அந்த இடங்களில் திடீரென்று அங்கே ஆறுகள் புதிதாக உருவாகி உள்ளன. அதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. பெரிய நீர்ப்பாசன அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஓ, நான் அவர் சொல்லியிருக்கிறார்.... பிறகு என்ன நடக்கும்? மற்ற அனைத்து காரியங்களும்: அந்த யூதர்கள் உள்ளே வந்து கொண்டிருக்கின்றனர். "என் குமாரர்கள் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கில் இருந்தும், தெற்கில் இருந்தும் வரட்டும்" என்று அவர் கூறியிருக்கிறார். தீர்க்கதரிசியும் கூட அதையே கூறியிருக்கிறார். இந்தக் கடைசி நாட்களில் அது நடக்கும். இங்கே அவர்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டும், விமானங்களில் ஏற்றப்பட்டும் உலகம் முழுவதிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு பேச்சு வழக்குகள் உள்ள எல்லா இடங்களிலிருந்தும் அவர்கள் ஒன்று சேர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். 49. அவர்களை உள்ளே கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர், முடவர்கள், குருடர்கள் சப்பாணிகள் சப்பாணிகள் ஒவ்வொருவரையும் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அங்கே அவர்கள் தங்களுடைய வயதான பார்வையற்ற தாய்மார்களையும், பார்வையற்ற தந்தைமார்களையும் முதுகில் சுமந்து கொண்டு உள்ளே வந்து கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்களுடன் வழி நடத்தி செல்லப்பட்டு உள்ளே சென்று கொண்டிருக்கின்றனர். அங்கு குடியேறிய சில மனிதர்கள், இந்த வயதான பார்வையற்றவர்களை, நோக்கி, "எதற்காக நீங்கள் உங்கள் தாய்நாட்டிற்கு வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருக்கிறீர்கள்? தாய்நாட்டிலுள்ள உங்கள் வீட்டிற்கு மரிப்பதற்காகவா வந்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கூறினர். "இல்லை, நாங்கள் மெசியாவைக் காண்பதற்காக வந்து கொண்டிருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் அவர் வந்து கொண்டிருக்கிறார் என்பதை விசுவாசிக்கின்றனர். அவர்கள் தங்களுடைய சொந்த முறைமைகளால் அவரை நிராகரித்து விட்டிருந்த போதிலும் கூட தேவனுடைய வார்த்தையானது நிறைவேற்றப்பட வேண்டும். இங்கே அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், மற்ற இடங்களிலும் தங்கள் செல்வத்தை எல்லாம் பிணைத்து (Tied up) வைத்துக் கொண்டிருக்கும் பெரிய ஆணவமுள்ள யூதர்களில் சிலர் இங்கேயே தங்கி இருப்பார்கள். ஆனால் தேவன் அந்த தாழ்மையான, பணிவுள்ள, அறியாமை கொண்ட, ஏழை யூதர்களை தன்னுடைய ஆவியின் மூலமாக அவர்களை இஸ்ரவேல் தேசத்திற்குள் திரும்பவுமாக ஓடி வரச்செய்து, அந்த ஒரு லட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் அங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். (அது தீர்க்கதரிசனமாக உரைக்கப் பட்டிருக்கிறது). அவர்களை தேவன் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் அங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள். மேசியா வருவதை காண அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். 50. நாம் வேத வசனங்கள் ஊடாக ஆராய்ந்து பார்ப்போமென்றால், அங்கே நின்று கொண்டிருக்கும் படித்த மேதைகளோடு, நான் அறிந்த வகையில் யூதர்களைப் பற்றிய ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் நிறைவேற வேண்டியது மட்டுமே அங்கே விடப்பட்டுள்ளது. அது ஒரு ஆவிக்குரிய விழிப்புணர்வாக இருந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் விவசாயக் கேந்திரங்களாக மாறிவிட்டது. பெரிய நீர்ப்பாசன அமைப்புகள் மூலம் தண்ணீரானது (சிறந்த நீர்வளம் கொண்ட) எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறது. அந்த பாலைவனத்தில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குவதைப் போல யூதர்கள் செழித்து வளர்ந்து கொண்டுவருகிறார்கள், இஸ்ரவேல் திரும்பி வந்து கொண்டிருக்கிறது, ஒவ்வொரு காரியமும் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் பாடலை நான் நினைத்துப் பார்க்கிறேன். தேசங்கள் உடைந்து கொண்டிருக்கின்றன, இஸ்ரவேல் விழித்துக் கொண்டிருக்கிறது. வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்ட அந்த அடையாளங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டது. ஓ சுமைதாங்கிகளே உங்கள் சொந்தத்திற்கு திரும்புங்கள். மீட்பின் நாள் சமீபமாக இருக்கிறது. மனிதர்களின் இதயம் பயத்தில் நடுங்குகிறது. தேவனுடைய ஆவியால் நிரப்பப்படுங்கள் உங்கள் தீவட்டிகளை சுத்தம் செய்யுங்கள். உங்கள் மீட்பு அருகில் உள்ளதை கவனியுங்கள். மேல்நோக்கி பாருங்கள். 51. இப்பொழுது முடிக்கப் போகின்ற நேரத்தில் கவனியுங்கள். இந்த யூதர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மேசியா வருவதற்காகவும் ஒரு மகத்தான விழிப்புணர்வு உள்ளே வருவதற்காகவும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரத்தில் இருக்கின்ற ஸ்டாக்ஹோம் சபையானது (Stockholm church) அந்த யூதர்களுக்கு ஆயிரக்கணக்கான வேதாகமங்களை (புதிய-ஏற்பாடு-NewTestament) அனுப்பி வைத்துள்ளது. (எவ்வளவு என்று எனக்கு மறந்து விட்டது) அவர்கள் அதை வாசித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் இயேசுவைக் குறித்து கேள்விப்படவே இல்லை. ஆகவே அவர்கள் இதை வாசித்து விட்டு; "இது கிறிஸ்துவாக இருக்குமானால் இயேசு செய்ததைப் போல தீர்க்கதரிசியின் அடையாளத்தை நாம் காணும்படி செய்யட்டும். நாங்கள் அவரை விசுவாசிப்போம்" என்று கூறினர். என்ன ஒரு நேரம் ஓ நான், இப்பொழுது நமக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை எண்ணிப் பார்க்கும் போது என்னுடைய இதயம் மகிழ்ச்சியினால் துள்ளிக் குதித்தது. இங்கே இருந்து வெளியேறியவுடன் இஸ்ரேலுக்குள் நேரடியாக செல்வேன், அங்கே அந்த தூய்மையான பிரதேசத்திற்குள் மத வைராக்கியம் கொண்ட எந்த ஒரு காரியமும் அங்கே ஒரு போதும் கொண்டு செல்லப்படவில்லை. ஆகவே சுமார் பத்து லட்சம் அல்லது இருபது லட்சம் யூதர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானததைப் பெற்றுக் கொண்டு விழித்தெழுவார்கள் என்று நான் நினைத்தேன். இயேசு கிறிஸ்து நிச்சயமாகவே காட்சியில் எழும்பி வருவார். தீர்க்கத்தரிசனத்தில் கூட "கடைசி நாட்களில் அங்கே எருசலேம் மீது ஒரு கொடி உயர்த்தப்பட்டிருக்கும்" என்று அவர் கூறியுள்ளார், மற்றொரு அடையாளம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக பழமை வாய்ந்த தாவீதின் ஆறு முனைகள் கொண்ட நட்சத்திர கொடியானது இன்று எருசேலம் மீது பறந்து கொண்டிருக்கிறது. மேலும் இதில் விசித்திரமான ஒரு காரியம் என்னவென்றால், அதை நீங்கள் அறியாமல் இருக்கலாம், 1947-ம் வருடம மே மாதம் 6-ம் தேதி, அதே நாளில் கர்த்தருடைய தூதனானவர் என்னை அழைத்து வியாதியஸதர்களுக்கு ஜெபிக்கும் படியான ஒரு வரத்தை எனக்கு அளித்தார். அதே நாளில்தானே இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களில் முதன் முறையாக இஸ்ரேல் ஒரு தேசமானது. ஓ, அங்கே ஏதோ சில காரியங்கள் இருந்து கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். நாம் முடிவு காலத்திற்கு மிக அருகில் இருந்து கொண்டிருக்கிறோம். அது சரியே. அங்கே அந்த யூதர்கள் மகத்தான ஒரு அடையாள கம்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு காரியங்களும் சரியாக அவர்களை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது. அந்த யூதர்களை கவனியுங்கள் தங்களுக்குப் பிரியமானவர்களை சுமந்து கொண்டு திரும்பவுமாக உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். 52. மூன்று வாரங்களுக்கு முன்பு அந்த படமானது எடுக்கப்பட்டது. அவர்கள் அதைக்குறித்து பேசிக் கொண்டிருந்த போது ஒலி நாடாக்கள் மூலமாக அந்தப் பதிவுகளை, அவர்களின் குரலை நானே கேட்டுக் கொண்டிருந்தேன். "இல்லை, அங்கே-அவர்கள் மெசியாவைக் காண வந்து கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினேன். அவர் வந்து கொண்டிருக்கிறார் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த காலத்தில் அவர்கள் ஏன் வர வேண்டும்? ஒவ்வொரு அடையாளங்களையும் கவனியுங்கள். இங்கே உள்ள அனைத்து தேசங்களையும் கவனியுங்கள். மனிதர்கள் உடைந்து போன நிலையில் இருந்து கொண்டிருப்பதைக் கவனியுங்கள். எங்கும் கம்யூனிசக் கொள்கையானது பரவிக் கொண்டு வருவதைக் கவனியுங்கள். பரிசுத்த ஆவியானது ஒவ்வொரு குன்றுகளிலும் அக்கினி எரிந்து கொண்டிருப்பதைப் போல அக்கினி எழும்பிக் கொண்டிருப்பதை பாருங்கள். அந்த யூதர்கள் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்றன. சப்பாணிகள், ஊனமுற்றோர், பார்வை யற்றோர், துன்பப்படுகிறவர்கள் போன்றவர்களை உள்ளே கொண்டு வந்து அந்த மெசியாவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஓ, எல்லா ஆசீர்வாதங்களும் அவர்களுக்கு நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது, தேவனுக்கே துதி உண்டாவதாக அங்கே சுமார் ஆயிரக்கணக்கான யூதர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெறப் போகிற அந்த வேளைக்காகவும், குணமாகுதலின் அடையாளங்களும், அற்புதங்களும் இஸ்ரவேலில் நடக்கப் போகிறதை நான் காண விரும்புகிறேன். நாம் சாலையின் முடிவில் இருந்து கொண்டிருக்கிறோம். 53. "இந்த அடையாளங்கள் அவர்களைப் பின் தொடரும்" அவர்களுடைய மெசியா ஏதோ ஒரு வேதசாஸ்திர கோட்பாட்டின் தேவனாக இல்லாமல் ஒரு வல்லமையுள்ள தேவனாக இருக்கிறார். அவர் ஒருவரே அற்புதங்களைகச் செய்கிறவராக இருக்கிறார். ஜனங்களுடைய இருதயங்களில் உள்ள இரகசியங்களை அறிந்தவராக இருக்கிறார். அவரே யெகோவா தேவனாக நிலைத்திருக்கிறார். அது சரியே. மேலும் இயேசு கிறிஸ்துவானவர் பூமியின் மேல் யெகோவா தேவனால் மாம்சத்தில் உண்டாக்கப்பட்டு மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டு ஜனங்களின் மத்தியில் இன்று ஜீவித்துக் கொண்டிருக்கிறார். புறஜாதியின் நாட்கள் முடிந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது முடிப்பதற்கு முன்பாக மேலும் ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன். நான் கடைசியாக வாசித்த வேத வசனத்தில், 'அது பகலுமல்ல இரவுமல்ல" (அது பகல் என்றோ அல்லது இரவு என்றோ என்று உங்களால் கூற இயலாது) ஆனால், "சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்" என்று சகரியா தீர்க்கத்தரிசி கூறியிருக்கிறார். முடிப்பதற்கு முன், சற்று கூர்ந்து கவனியுங்கள். சூரியன் உதிக்கும் போது அது கிழக்கில் இருந்து கொண்டிருக்கும். அது மறையும் போது மேற்கில் மறைகிறது. இது ஒரு நாளின் மனிதவர்க்கத்தின் இறையியலாக இருந்து வருகிறது. 54. கிழக்கத்திய ஜனங்களாகிய அந்த யூதர்கள் மீது சூரியன் உதித்தபோது, அந்த யூதர்கள்...ஆவியின் ஞானஸ்நானத்தை பெந்தெகொஸ்தே நாளில் முதலாவதாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களாக இருந்தனர். மேலும் அந்த முற்காலத்திய வைதீக யூதர்கள் மற்றும் முற்காலத்திய சபைக் காலங்கள் ஊடாக அது யூதர்களுக்கு மட்டுமே என்று இருந்தது. அதன்பிறகு அது புறஜாதிகளுக்கு கொடுக்கப்பட்டது. பவுல் அவர்களுக்கு போதகராக இருந்தார். புறஜாதிகள் அதை பெற்றுக் கொண்ட போது பிறகு அவர்கள் அதை வெளியே கொண்டு செல்லவில்லை. தங்கள் சபைகளை ஸ்தாபிக்கத் தொடங்கினார்கள். உலகிலேயே முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சபை கத்தோலிக்க சபையாகும். அதற்கு அடுத்தபடியாக ஸ்தாபிக்கப்பட்ட சபை லுத்தரன் சபையாகும். பின்னர் வெஸ்லி, மற்றும் இங்கிலாந்தின் உயர்குடிவகுப்பு சபை ஸ்தாபிக்கப்பட்டு ஓ, ஒவ்வொரு காலத்திலும் அது கீழ்நோக்கி சென்று அலெக்சாண்டர் காம்ப்பெல்ன் கிறிஸ்தவ சபை வழியாக வந்து இப்பொழுது கடைசி காலத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். கத்தோலிக்க சபையானது ஆரம்பத்தில் துவங்கியதைப் போலவே ஒவ்வொருவரும் ஸ்தாபித்துக் கொண்டனர். இந்த இருண்ட நேரத்தில், மப்பும் மந்தரமுமான ஒரு பயங்கரமான நாளை எப்பொழுதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த நாட்களின் வழியாகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயேசு தான் கிறிஸ்து என்பதை அவர்கள் காணும்படியாக போதுமான வெளிச்சம் நன்றாகவே இருந்தது, எனவே அவர்கள் அவரை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் ஆனால் அவருடைய மகத்தான வல்லமைகள், மற்றும் காரியங்கள் அவர்களுக்கு மறைக்கப்பட்டதாகி விட்டது. அவர்களால் அதைப் பார்க்க முடியவில்லை. "அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன" என்றும் பெந்தகொஸ்தே நாளில் அவர்களிடம் இருந்த அனைத்து காரியங்களும் நின்று போய்விட்டன (Ceased) என்று அவர்கள் கூறினர். அப்பொழுதுதான் அந்த சூரியன் திரும்பவுமாக கிழக்கில் பிரகாசித்துக் கொண்டிருந்தது". 55. ஆனால் பூகோள ரீதியாக கூறுவோமானால், கவனியுங்கள். சூரியன் இப்பொழுது கடந்து சென்று விட்டது, மனிதனுடைய வேத சாஸ்திர கோட்பாடு, சபை ஸ்தாபனங்கள், மற்ற அமைப்புகள் இது போன்றவைகளால் அது கிறிஸ்தவர்களுடைய கண்களுக்கு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது அது சரியே. அது தெய்வீக சுகமளித்தலை இருட்டடிப்பு செய்து விட்டது. அது தேவனுடைய வல்லமையை இருட்டடிப்பு செய்து விட்டது. அது எல்லா வரங்களையும் இருட்டடிப்பு செய்து விட்டது. எங்கே சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ அங்கே அவர்கள் திரும்பவுமாக அதை பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். இதோ "சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்" என்று தீர்க்கத்தரிசி கூறியிருக்கிறார். சூரியன் கிழக்கில் உதிக்கின்றது, அது மேற்கில் மறைகிறது. ஆகவே நாம் மேற்கத்திய ஜனங்களாக மேற்கு பகுதியில் இருந்து கொண்டிருக்கிறோம் இங்கே நாம் மேற்கத்திய ஜனங்களாக இருந்து கொண்டிருக்கிறோம். மேலும் ஆரம்பத்தில் பெந்தகோஸ்தே நாளில் விழுந்த அதே ஆவியும், அதே காரியங்களும் மீண்டுமாக இந்த கடைசி நாட்களில் சபைகளில் திரும்பவுமாக நிகழ்ந்து வருகின்றன, கடந்து இருபது அல்லது முப்பது வருடங்களாக மேற்கத்திய உலகத்தில் அதே அடையாளங்கள் காணப்பட்டுக் கொண்டிருக்கிறது. "சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்" அந்த மேகங்கள் மீண்டுமாக கலைந்து செல்கின்றன. ஸ்தாபனங்கள் உடைந்து சிதறி போய்விட்டன ஜனங்கள் ஆரம்பத்தில் இருந்ததைப் போலவே, அற்புதங்களுடனும், அடையாளங்களுடனும் நுழைந்து விட்டனர். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்குள் "சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்." 56. அது மணவாட்டி தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு மாலை வேளை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரெபேக்காள் மாலை நேரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டாள். அவள் ஈசாக்கை சந்தித்தது ஒரு மாலை வேளையாக இருந்தது. அவன் வயல்வெளியில் இருந்தான். அது ஒரு மாலை வேளையாக இருந்தது. நம்முடைய புறஜாதியின் எழுப்புதல் மிக விரைவில் முடிவடையப் போகிறது. யூதர்கள் எழுப்புதலை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள். விரைவில் அவர்கள் தேவனுடைய வல்லமை பிரத்யட்சமாவதைக் கண்டு, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு சுவிசேஷத்தைக் ஏற்றுக் கொள்வார்கள். நமது புறஜாதி நாட்கள் முடிவடைந்து கொண்டிருக்கிறது. இராஜ்யத்திற்குள் நுழைந்து கொள்வதற்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றபோதே அந்த இராஜ்யத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். சிகாகோவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மனிதர் உங்கள் நண்பர்களில் ஒருவரான பால்ரேடர்-ஐ (Paul Rader), அந்த மகத்தான மனிதரைக் குறித்து நான் உணர்கிறேன். பவுல்ரேடர் ஒரு மரம் வெட்டுவர். அவர் இங்கே சிகாகோ நற்செய்தி கூடாரத்தில் பிரசங்கித்துள்ளார், போதகராக பணியாற்றியிருக்கிறார். உங்களில் அநேகர் அவரைக்குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு மகத்தான மனிதர் நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு முறை அவரைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறேன். (அப்பொழுது நான் சிறு பையனாக இருந்தேன்). 57. ஆனால் நான் அவருடைய புத்தகத்தை சில நாட்களுக்கு முன்பு வாசித்துக் கொண்டிருந்தேன். அவர் அங்குள்ள சில நாட்டுப்புறங்கள் முழுவதுமாகச் சென்று அங்கே மிஷினரி வேலைகளைச் செய்து வந்ததாகவும், அவருக்கு ஒரு விதமான காய்ச்சல் கண்டது, கருப்பு தண்ணீர் காய்ச்சல் (Black Water Fever) அல்லது மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) இப்படி ஏதோ ஒரு காய்ச்சல் கண்டதாகவும் அது அவர் சுயநினைவு இல்லாமல் போகும் வரையிலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவர் தன்னுடைய மனைவியிடம், "என்னை விட்டு போகாமல், என்னுடன் இருந்து எனக்காக ஜெபம் செய்" என்று கூறினார். அவள் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தாள் என்றும் கூறினார் பிறகு அவர் சுயநினைவு இல்லாத நிலைக்கு போய்விட்டார். மேலும் அவர் தேவன் பேரில் நம்பிக்கை வைத்திருந்தார். பால் ரேடர் தெய்வீக சுகமளித்தலை பிரசங்கித்தார், அதுமட்டுமல்ல அதை செயலில் நடைமுறைப்படுத்தினார். ஆகவே பிறகு அவர் சுயநினைவு இல்லாத நிலையில் இருந்தபோது அவர் மீண்டும் காட்டிற்கு சென்று வழக்கமாக முன்பு அவர் செய்வதைப் போல ஒரு மரத்தை, நீளமான (Log) மரத்துண்டை வெட்டிக் கொண்டிருப்பதைப் போல கனவு கண்டார் என்றும் கூறினார், அவருடைய எஜமான் அவரை ஒரு மரத்துண்டை வெட்டுவதற்கு மலைக்கு அனுப்பியிருந்தார். மேலும் அவர் அந்த மரத்தை வெட்டும்போது மிருதுவான பச்சை மரத்தில் அவருடைய கோடாரியானது பதிந்து கொண்டது, அதை வெளியில் எடுக்கத் துவங்கினார், அவரால் அதை எடுக்க முடியவில்லை அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. நல்லது, "சரி, ஏன் இப்படி ஒரு மரத்துண்டை வெட்டச் சொல்லி என்னுடைய எஜமான் என்னிடம் கேட்கவேண்டும், மேலும் என்னால் அதை மேலே எடுக்கவும் முடியவில்லையே?" என்று அவர் கூறினார். இந்த அடையாளத்தை நீங்கள் பெற்றுக் கொண்டால் இதன் அர்த்தத்தை புரிந்து கொள்வீர்கள். தேவன் இந்த சுவிசேஷத்தை உங்களுக்கு ஒரு போதும் ஒன்றுமில்லாமல் கொடுக்கவில்லை, அதைச் செய்வதற்காக அவர் கிருபையையும் அதனுடன் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் அது சரியே. அவர் ஒரு போதும் அப்படி வாக்களிக்கமாட்டார் ஆனால் அதை நிறைவேற்றுவார். ஆகவே அவர் அதை மேலே எடுப்பதற்கு முயற்சி செய்தும் அதை எடுக்க முடியவில்லை. அவராகவே அதை சற்று இழுத்தபோது அவர் மிகவும் சோர்வடைந்து விட்டதாக கூறினார். 58, இன்று சபை ஸ்தாபனங்கள் அதைத்தான் செய்துள்ளன. தங்களை தாங்களாகவே அதை இழுத்துக் கொண்டு, அதையும், இதையும் செய்ய முயற்சித்து பிறகு சோர்வடைந்து போய் தேவனே அதைச் செய்யட்டும் என்று விட்டு விடுகிறது. அந்த காரியம் அப்படித்தான் செய்யப் படுகிறது. தேவன் அதைச் செய்யட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். எப்படி இருப்பினும் உங்களுக்கு அது மிகவும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தேவன் மனிதர்களை ஒரு வரையரைக்குள்ளாக அவர்களை ஒடிக் கொண்டிருக்கும்படி செய்கிறார், இந்த உலகத்தில் அவர்களை இருக்கும் படியாக செய்து, இந்த உலகத்தில் தாங்களாகவே இயங்க முடியாது என்பதை அவர்களைக் கொண்டே நிரூபித்து வருகிறார். தேவன் தன்னுடைய வல்லமையுள்ள கரத்தால் இந்த உலகம் நிலைநிற்க முடியாது என்று காண்பித்துக் கொண்டிருக்கிறார் அது சரியே. தேவன் இந்த உலகத்தை இயேசு கிறிஸ்து மூலமாக ஆட்சி செய்வார். ஆனால் இப்பொழுது மனிதன் அதை ஆளுகை செய்ய விரும்புகிறான். அவன் அதை எவ்வளவு குழப்பத்தில் ஆழ்த்தி விட்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் அவன் அதையேதான் செய்து வருகிறான். ஜலப்பிரளய காலத்திற்கு முன்பு இருந்த உலகத்திற்கு அந்த அடையாளங்கள் கொடுக்கப்பட்டது. கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்பும் அவன் அதே மாதிரியான ஒரு நிலையில் அவன் இருந்தான். என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அந்த அடையாளங்கள் தோன்றியுள்ளன. இப்பொழுது அது மூன்றாவது முறையாகவும், கடைசி நேரமாகவும் இருந்து கொண்டிருக்கிறது. இது எல்லா காரியங்களின் முடிவாக இருக்கின்றது. 59. பால்ரேடர் (Paul Radar) தான் சோர்ந்து போகும் வரையிலும் அதை இழுத்துக் கொண்டிந்தார் அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு மரத்தின் அருகில் உட்கார்ந்து அழத் தொடங்கினார். "ஐயோ என்னால் அதை எடுக்க முடியவில்லையே நான் என் பலத்தை முற்றிலுமாக இழந்துவிட்டேன்" என்றார் அவருடன் ஒரு சத்தம் பேசியது.... மன்னிக்கவும் அவருடைய எஜமானுடைய சத்தம் ஒரு கனிவான குரலில் அவருடன் பேசியதை கேட்டார், "பால்" என்று கூப்பிட்டு "நீ ஏன் தடுமாறிக் கொண்டிருக்கிறாய்" "ஏன் அதை தண்ணீரில் எறிந்து விடக்கூடாது மேலும் அந்த தண்ணீர் சரியாக கீழே உள்ள அந்த முகாமை சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறது" என்று அந்த சத்தம் கூறியது. அவர் மேல் நோக்கிப் பார்த்தார் அவருடைய அந்த எஜமான் கர்த்தராகிய இயேசுவாக இருந்தார். உடனே அவர் அந்த பழைய மரத்துண்டை ஆற்றில் தள்ளிவிட்டு அதன் மீது குதித்து தண்ணீரைத் தள்ளிக் கொண்டு "நான் சவாரி செய்து கொண்டிருக்கிறேன்" "நான் சவாரி சென்று கொண்டிருக்கிறேன்" "நான் சவாரி செய்து கொண்டிருக்கிறேன்" என்று அவரால் உரக்க சத்தமிட்டுக் கொண்டே அந்த முகாமிற்கு வந்து கொண்டிருந்தார். மேலும் அவர் சுயநினைவுக்கு வந்த போது தரையின் நடுவில் நின்று கொண்டு வானத்தை நோக்கி கரங்களை உயர்த்தி "நான் சவாரி செய்து கொண்டிருக்கிறேன், நான் சவாரி செய்து கொண்டிருக்கிறேன், என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அது தேவனுடைய வாக்குத்தத்தமாக இருக்கிறது, மேலும் சரியாக அப்பொழுதே அங்கே அந்த அறையில் காய்ச்சல் அவரை விட்டுப் போய்விட்டது. 60. எனவே இன்று இது சாயங்கால வெளிச்சமாக இருக்கிறது. மேலும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாகிய இந்த எழுப்பதலில் இந்தக் கடைசி நாட்களில் தேவனுடைய வெளிச்சமாக இருந்து கொண்டிருக்கிறது. "இது மாலைநேர வெளிச்சம்" நான் அதில் சவாரி செய்து கொண்டிருக்கிறேன். நான் அதை நம்புகிறேன். அது சத்தியமாக இருக்கிறது எனக்கு நியாயத்தீர்ப்பு இல்லை, ஆனால் தேவனை அவருடைய வார்த்தையில் மட்டுமே எடுத்துக் கொண்டு, சரியாக அவருடைய இராஜ்யத்திற்குள் சவாரி செய்து கொண்டிருக்கிறேன். ஆமென். நண்பனே இந்த பிற்பகல் வேளையில் நீ அதன் மீது சவாரி செய்து கொண்டிருக்கிறாயா? நீ அதை விசுவாசிக்கிறாயா? இங்கு எத்தனை பேர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள் நான் பார்க்கட்டும். என்ன அற்புதமாக இருக்கிறது. இன்னும் எத்தனை பேர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெறாதவர்கள், அதைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள் இங்கே கவனியுங்கள், மற்றொரு குழு? கரங்களை உயர்த்தின நீங்கள் இப்பொழுதே எழுந்து நில்லுங்கள். இது சாயங்கால வெளிச்சமாக இருக்கிறது மகிமையின் பாதையை நிச்சயம் நீ கண்டுகொள்வாய். பரிசுத்த ஆவியின் வழியே இன்றைய வெளிச்சமாக இருக்கிறது. இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்திற்கு நாம் ஊழியம் செய்கிறோம். வாலிபரே, முதியோரே, உங்கள் எல்லா பாவங்களிலும் இருந்து மனம் திரும்புங்கள் பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உள்ளே வருவார். (நீ இதை விசுவாசிக்கிறாயா?) அந்த சாயங்கால வெளிச்சம் வந்திருக்கிறது 61. இங்கே நாம் அந்த எழுப்புதலில் இருந்து கொண்டிருக்கிறோம். எழுப்புதல் சென்று கொண்டிருக்கிறது. இந்த கட்டிடம் முழுவதும் கர்த்தருடைய தூதர்களால் நிரம்பி இருக்கிறது. கர்த்தருடைய தூதர்கள் அவரில் அன்பு கூறுகிறவர்களை சுற்றி (அது சரிதானே?) அவருக்குப் பயந்தவர்களை சுற்றி பாளையம் இறங்கியுள்ளனர். இப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளாதவர்களாக இருந்தால் எழுந்து நின்று இந்த ஜனங்களுடன் சேர்ந்து அவர்கள் மேல் உங்கள் கரங்களை வையுங்கள் பரிசுத்த ஆவி தேவைப்படுகிறவர்கள் மேல் பரிசுத்த ஆவியோடு இருக்கின்ற நீங்கள் எழுந்து நின்று உங்கள் கரங்களை பரிசுத்த ஆவி இல்லாதவர்கள் மீது வையுஙகள். அங்கே யாராவது ஒரு பாவி இருப்பாரென்றால் நீங்களும் கூட எழுந்து நில்லுங்கள். தேவனுடைய ஒரு ஊழியக்காரனாக, பத்து லட்சம் மக்களிடம் எனக்கு இருக்கும் நற்பெயரை உணர்ந்தவனாக, நான் இந்த உலகத்திற்கு எதையும் தவறாக கூறிவிட முடியாது. ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்பட முடியும் என்றும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை தேடிக் கொண்டிருக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் சரியாக இந்த நிமிடமே நிரப்பப்படமுடியும் என்றும் நான் விசுவாசிக்கிறேன். அவருடைய ஆசீர்வதிக்கப்பட்டதான அந்த வருகையின் அடையாளங்கள் தோன்றிக் கொண்டிருப்பதை காண்கிறீர்களா?. இதோ பாருங்கள், அத்திமரம் இப்பொழுது துளிர்விடுகின்றன. அவருடை இராஜ்யத்தின் சுவிசேஷமானது ஒவ்வொரு தேசங்களுக்கும் சென்றடைந்து விட்டது. நாம் முடிவின் அருகில் இருப்பதை காண முடிகிறது. 62. நாம் இங்கே இருந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய கரங்களை மேலே உயர்த்துவோமாக, "ஒருமுறை பலவீனமாக தொங்கிக் கொண்டிருந்த அவர்களுடைய கரங்கள் உயர்த்தப்படட்டும்" மேலும், தேவனுக்கு துதிகளை ஏறெடுப்போம் பிறகு பரிசுத்த ஆவியின் ஞானஸ்தானத்திற்காக அவருக்கு நன்றி செலுத்துவோம் வேதாகமம் கூறுகிறது. (ஜோசப் நீங்கள் இங்கே வாருங்கள்). இப்பொழுதும், எங்கள் பரலோகப் பிதாவே, இந்த பிற்பகல் வேளையில் இங்கே இந்த கட்டிடத்தில் ஒன்றாக கூடி வந்திருக்கும் இந்த சிலாக்கியத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம். மேலும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் இங்கு நின்று கொண்டிருக்கும் இந்த ஜனங்கள், பாவிகள் அவர்கள் பரிசுத்த ஆவியுடன் நின்று கொண்டிருக்கும்படியாக நாங்கள் ஒருமனப்பட்டவர்களாக ஜெபிக்கிறோம். ஓ, பிதாவே, பரிசுத்த ஆவியானவர் வந்து இப்பொழுதே அவர்கள் ஒவ்வொருவரையும் அசைத்து அவர்களை பரிசுத்த ஆவியால் நிரப்புவீராக. அக்கினியின் நெருப்பு தழலானது (Fire Brands) கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு முன்பாக அவர்களை பற்றி பிடித்துக் கொள்வதாக (Snatch) அவர்களை பிடித்துக் கொள்வீராக, இந்த பிற்பகல் வேளையில் பிசாசானவன் அவர்களை எங்காவது கொண்டு சென்று சிக்கவைத்து விடுவதற்கு முன்பாக இயேசு கிறிஸ்துவின் மூலம் அதை அருள்வீராக. தேவனுக்கு துதி உண்டாவதாக உங்கள் கரங்களை உயர்த்தி "இயேசுவே உமக்கு நன்றி" என்று கூறி அவருடைய நன்மைகளுக்காக அவருக்கு துதி செலுத்துவோமாக THE GREAT COMING REVIVAL AND THE OUTPOURING ON THE HOLY SPIRIT 2 1 வருகின்ற மகத்தான எழுப்புதலும், பரிசுத்த ஆவி ஊற்றப்படுதலும்